வீர தீரு சூரன் பட நடிகைக்கு அடித்த ஜாக்பாட்.. விஷாலுக்கு ஜோடியாகும் துஷாரா விஜயன்?
சென்னை: பா.ரஞ்சித் இயக்கிய சார்பட்டா பரம்பரை படத்தில் "மாரியம்மா" என்ற கதாபாத்திரத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தியவர் தான் நடிகை துஷாரா விஜயன். அடுத்தடுத்து பெரிய நடிகர்களின் படத்தில் நடித்து வரும் துஷாரா விஜயன், தற்போது, விஷாலுக்கு ஜோடியாக கமிட்டாகி உள்ளார்.
சவாலான கதாபாத்திரத்தை அசால்டா நடித்து வரும் துஷாரா விஜயன் இயக்குநர் வசந்தபாலனின் 'அநீதி' படத்தில் அர்ஜுன் தாசுக்கு ஜோடியாக நடித்திருந்தார். ரசிகர்களின் மத்தியில் பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்ற அநீதி படம், அவருக்கு நல்ல பெயரை கொடுத்தது மட்டுமில்லாமல் நல்ல வசூலை அள்ளியது. அதன் பின், தனுஷ் இயக்கிய ராயன் படத்தில் தனுஷின் தங்கையாக நடித்திருந்தார். அந்த படத்தில் இடம் பெற்ற உசுரே நீ தான் என்ற பாடல் மிகப்பெரிய அளவில் ஹிட்டானது.

துஷாரா விஜயன்: ராயன் படத்தை தொடர்ந்து, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த, வேட்டையன் படத்தில் ஆசிரியராக நடித்திருந்தார். அதில், துஷாராவை எதிரிகள் கொடூரமாக கொலை செய்துவிட, அந்த கொலைக்கான காரணத்தை கண்டுபிடித்து அவருக்கு சரியான தண்டனை வாங்கி கொடுக்கும் போலீசாக ரஜினி நடித்திருந்தார். இந்த படம் மிகபெரிய அளவில் வெற்றி பெற்றது. இந்த படத்தை தொடர்ந்து, அண்மையில் வெளியாகி சக்கைப்போட்டு வரும், வீர தீர சூரன் படத்தின் இரண்டாம் பாகத்தில் நடித்துள்ளார்.
வீர தீர சூரன்: இந்த படத்தை,சித்தா பட இயக்குநர் எஸ்.யு. அருண்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ளார். இப்படத்தை ரியா ஷிபு தயாரித்திருக்க எஸ்.ஜே.சூர்யா, சுராஜ், துஷாரா விஜயன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ள இப்படம் கடந்த 27ந் தேதி தியேட்டரில வெளியானது. இப்படத்திற்கு எதிராக மும்பையைச் சேர்ந்த நிறுவனம் டெல்லி உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்ததால் 27ந் தேதி காலை வெளியாக வேண்டிய படம் பிரச்சனை காரணமாக மாலை வெளியானது. படம் தாமதமாக வெளியான போதும், ஹவுஸ்புல் காட்சிகளாகத்தான் இருந்தது. முதல் நாளில் தமிழ்நாட்டில் மட்டுமே 2 கோடியே 4 லட்சத்து 18 ஆயிரம் வசூல் செய்து இருக்கிறது. படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

விஷாலுக்கு ஜோடியாக: இந்நிலையில், விஷாலு ஹீரோவாக நடிக்கும் படத்தில் துஷாரா விஜயன் ஹீரோயினாக கமிட்டாகி உள்ளார். மதகஜராஜா படத்தின் வெற்றிக்குப் பிறகு, பல படங்களில் நடிக்க திட்டமிட்டிருந்தார் விஷால். ஆனால், பட்ஜெட் பிரச்சினையால் எதுவுமே நடைபெறாமல் இருந்தது. இதனால் தனது நிறுவனம் மூலம், ரவி அரசு படத்தினை அவரே தயாரித்து நடிக்க முடிவு செய்துள்ளார். இதற்காக துஷாரா விஜயனிடம் கதை சொல்ல அவர் கதையை கேட்டுவிட்டு, சம்மதம் தெரிவித்திருக்கிறார். துஷாரா ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட பிறகு, இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சுந்தர் சி இயக்கி மதகஜராஜா திரைப்படம் 12 ஆண்டுகளுக்கு பின் பொங்கல் பண்டிகைக்கு தியேட்டரில் வெளியாகி மிகப்பெரிய அளவில் பெற்றி பெற்றது. இந்த திரைப்படத்தில், வரலட்சுமி, அஞ்சலி, சந்தானம் ஆகியோர் நடித்திருந்தனர். பொங்கலுக்கு பல திரைப்படங்கள் வெளியான போதும் இந்த படம் தான் மிகப்பெரிய வசூலை அள்ளியது.


Click it and Unblock the Notifications











