அஜீத்துடன் 'வீரம்' ஆக ரீஎன்ட்ரி கொடுத்த தமன்னா
சென்னை: வீரம் படம் தனக்கு பெரிய திருப்புமுனையாக அமையும் என்ற தமன்னாவின் எதிர்பார்ப்பு வீணாகவில்லை.
கேடி படம் மூலம் தமிழுக்கு வந்தவர் தமன்னா. பால் போன்ற மேனி கொண்ட அவர் கோலிவுட்டின் முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து நடித்தார். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர்.
இந்நிலையில் தமன்னாவின் மார்க்கெட் சரிந்து அவருக்கு தமிழில் வாய்ப்பு இல்லாமல் போனது.

காணாமல் போனார்
ஒரு கட்டத்தில் தமன்னா தமிழ் படங்களில் காணாமல் போய்விட்டார். தமிழில் வாய்ப்புகள் இல்லாவிட்டாலும் அவர் தெலுங்கு, இந்தி ஆகிய 2 மொழி படங்களில் தொடர்ந்து நடித்து வந்தார்.

மீண்டும் சிவா
கோலிவுட்டில் மறுபிரவேசம் செய்ய தக்க சமயத்தை எதிர்பார்த்து காத்திருந்தார் தமன்னா. அப்போது தான் சிறுத்தை என்னும் ஹிட் படத்தில் நடிக்க வாய்ப்பளித்த சிவா தமன்னாவை மீண்டும் அணுகினார்.

வீரம்
அஜீத் குமாருடன் வீரம் படத்தில் நடிக்க தமன்னாவை சிவா கேட்டார். தமன்னாவும் உடனே சம்மதம் தெரிவித்து நடிக்க வந்துவிட்டார். அஜீத்துடன் அவர் ஜோடி சேர்ந்த முதல் படம் வீரம்.

எதிர்பார்ப்பு
வீரம் படம் மட்டும் ஹிட்டானால் கோலிவுட்டில் மீண்டும் ஒரு ரவுண்ட் வரலாம் என்று நினைத்தார் தமன்னா. அதனால் அவர் வீரம் படத்தை பெரிதும் எதிர்பார்த்தார்.

ஹிட்டாகிடுச்சு
வீரம் ஹிட்டாக வேண்டும் என்ற தமன்னாவின் ஆசை நிறைவேறிவிட்டது. இதன் மூலம் தமன்னா கோலிவுட்டில் வீரமாக மறுபிரவேசம் செய்துள்ளார்.


Click it and Unblock the Notifications











