குடும்ப படங்கள்தான் நடிகைகளின் குணாதிசயத்தை சொல்லும்.. மனம் திறந்த வேலன் பட ஹீரோயின்!

சென்னை: வேலன் திரைப்படம் குடும்ப உறவுகளின் மதிப்பையும், உணர்வுகளின் மேன்மையையும் அழகான விதத்தில் கூறியிருப்பதாக அப்படத்தின் ஹீரோயினான மீனாக்ஷி தெரிவித்துள்ளார்.

ஸ்கைமேன் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் கலைமகன் முபாரக் தயாரித்துள்ள படம் வேலன். இந்தப் படத்தை கவின் இயக்கியுள்ளார்.

இப்படத்தில் பிக்பாஸ் முகேன் ஹீரோவாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக நடிகை மீனாட்சி கோவிந்தராஜன் நடித்துள்ளார். மேலும் பிரபு, தம்பி ராமைய்யா உள்ளிட்ட பலரும் இப்படத்தில் நடித்துள்ளனர்.

உறவுகளின் மதிப்பு

உறவுகளின் மதிப்பு

இப்படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது. இந்நிலையில் இப்படம் குறித்தும் இப்படத்தில் நடித்த அனுபவங்கள் குறித்தும் நடிகை மீனாக்ஷி கோவிந்தராஜன் பகிர்ந்துள்ளார். அவர் பேசியிருப்பதாவது, ​​" வேலன் திரைப்படத்தில் எனக்கு மிகவும் பிடித்த அம்சம் குடும்ப உறவுகளின் மதிப்பையும், உணர்வுகளின் மேன்மையையும் அழகான விதத்தில் சொன்னது தான்.

சந்தோஷமாக இருப்பார்கள்

சந்தோஷமாக இருப்பார்கள்

குடும்பத்துடன் இருக்கும்போது எப்போதுமே ஒருவர் சிறந்த நிம்மதியான மனநிலையுடன் சந்தோஷமாக இருப்பார்கள். இதை நான் 'வேலன்' குழுவுடன் பணிபுரியும் போது ஆத்மார்த்தமாக உணர்ந்தேன். அவர்கள் என்னைத் தங்கள் சொந்தக் குடும்ப உறுப்பினராகவே நடத்தினார்கள். வேலன் போன்ற நல்ல குடும்ப பொழுதுபோக்கு திரைக்கதையை ஊக்குவித்ததோடு, அதில் என்னையும் ஒரு அங்கமாக்கிய தயாரிப்பாளர் கலைமகன் முபாரக் சாருக்கு நன்றி.

நடிகைகளின் குணாதிசயம்

நடிகைகளின் குணாதிசயம்

பெண்களை மையப்படுத்திய திரைப்படங்களில்தான் நடிகைகள் அதிக மதிப்பையும், கவனத்தையும் பெறுகிறார்கள் என்ற கருத்து இருந்தாலும், 'குடும்ப படங்கள்'தான் அவர்களின் சிறப்பான குணாதியசத்தை வெளிப்படுத்துவதாக நான் நம்புகிறேன். குடும்பம் என்பது ஆண்கள் மற்றும் பெண்களின் பண்புகளுக்கு அப்பாற்பட்ட ஒன்று, அங்கு அவர்களின் ஒருங்கிணைந்த பங்களிப்பு, ஆரோக்கியமான குடும்பத்திற்கு வழி வகுக்கும்.

முகேன் மிகவும் இனிமையான மனிதர்

முகேன் மிகவும் இனிமையான மனிதர்

அதேபோல், ஆண் மற்றும் பெண் நடிகர்கள் எப்போதும் குடும்ப திரைப்படங்களில் சமமான அளவில், முக்கிய கதாபாத்திரங்களைக் பெறுகிறார்கள். இந்த படத்தில் ஒரு அழகான கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது மிகுந்த மகிழ்ச்சியை தந்துள்ளது. முகேன் மிகவும் இனிமையான மனிதர். அவரது தொழிலின் அர்ப்பணிப்பைத் தாண்டி, அவர் ஒரு நல்ல உள்ளம் கொண்டவர்.

Recommended Video

Myna Nandhini Yogeshwaran Couple photoshoot | New Theme, Couple Photoshoot
அன்பாக பழகுவார்

அன்பாக பழகுவார்

படப்பிடிப்பு தளத்தில் உள்ள அனைவரிடமும் மிகவும் அன்பாக பழகுவார். குடும்ப பார்வையாளர்கள் விரும்பும் வகையில் ஒரு அழகான கதையை கவின் வடிவமைத்துள்ளார். தனிப்பட்ட முறையில், ஒரு ரசிகர் என்ற வகையில், இந்தக் குடும்பப் பொழுதுபோக்கு திரைப்படத்தை, திரையரங்குகளில் காண ஆர்வமாக காத்திருக்கிறேன். குடும்ப உறவுகளின் மதிப்பையும், உணர்வுகளின் மேன்மையையும் சொல்லும் அழகான படைப்பாக வேலன் இருக்கும். இவ்வாறு மீனாக்ஷி தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X