எம். ஆர். ராதாவுக்கு ரத்தக் கண்ணீர்.. ராதிகாவுக்கு தாய் கிழவி.. குடும்பத்துடன் வாழ்த்திய சிவகுமார்!

சென்னை: கிழக்கே போகும் ரயிலே படத்தில் பாசத்துக்குரிய பாரதிராஜா கண்ணில் எதேச்சையாக பட்டதால் சினிமாவில் அறிமுகமானவர் தான் நடிகவேள் எம்.ஆர். ராதாவின் மகள் ராதிகா. தமிழ், தெலுங்கு என பல்வேறு மொழிகளில் நூற்றுக்கணக்கான படங்களில் நடித்துள்ளார்.

வெள்ளித்திரையை தாண்டி சின்னத்திரையில் தயாரிப்பாளராகவும் முன்னணி நடிகையாகவும் வலம் வந்த ராதிகா சரத்குமார் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் நடித்துள்ள தாய் கிழவி திரைப்படம் உலகளவில் 25 கோடி வசூலை கடந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

Veteran Actor Sivakumar praises Radhika Sarathkumar and compares with MR Radha

இந்நிலையில், ராதிகாவுக்கு நடிகர் சிவகுமார் மற்றும் அவரது குடும்பத்தினர் வாழ்த்து தெரிவித்துள்ள இன்ஸ்டாகிராம் போஸ்ட் வைரலாகி வருகிறது.

சூர்யா, ஜோதிகாவின் முழு ஆதரவு: தாய் கிழவி படத்தை சிவகார்த்திகேயன் தயாரித்த நிலையில், சூர்யா மற்றும் ஜோதிகா இருவரும் ப்ரீமியர் ஷோவிலேயே படத்தை பார்த்து மனமார பாராட்டினர். சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் தாய் கிழவியாக நடித்து ராதிகா சரத்குமார் வசூலில் ருத்ர தாண்டவம் ஆடி வருகிறார். படத்தில் வரும் வட்டிக்கார கிழவி போலவே பாக்ஸ் ஆபீஸில் பெத்த தொகையை வசூல் செய்து வருகிறார்.

எம். ஆர். ராதாவுக்கு ரத்தக் கண்ணீர்: எம். ஆர். ராதாவுக்கு ரத்தக் கண்ணீர்.. ராதிகாவுக்கு தாய் கிழவி தனது கைப்பட எழுதிய பாராட்டுக் கடிதத்தை வழங்கிய சிவகுமார் ராதிகாவை வாழ்த்தியுள்ளார். மேலும், சிவகுமாரின் மகன்களான சூர்யா, கார்த்தி மற்றும் மருமகள் ஜோதிகா என ஒட்டுமொத்த குடும்பமே ராதிகாவை வாழ்த்தியுள்ளனர்.

நன்றி அண்ணா: 84 வயதாகும் சிவகுமார் 63 வயதாகும் ராதிகாவின் நடிப்பாற்றாலை பார்த்து பாராட்டி நடிகவேள் எம்.ஆர். ராதாவின் பொண்ணுன்னு நிரூபிச்சிட்ட என வாயாற பாராட்டிய நிலையில், அவருக்கு நன்றி அண்ணா என நன்றி தெரிவித்து இன்ஸ்டாகிராமில் அவருடன் எடுத்துக் கொண்ட போட்டோக்களையும் சூர்யா, ஜோதிகா, கார்த்தி உள்ளிட்ட குடும்பத்தினருடன் எடுத்த புகைப்படங்களையும் வெளியிட்டு தனது மகிழ்ச்சியை தாய் கிழவி ராதிகா சரத்குமார் வெளிப்படுத்தியுள்ளார். போற போக்கை பார்த்தால் சேயோன் படத்தை முடித்து விட்டு தாய் கிழவி 2 எடுத்தாலும் ஆச்சர்யப்படுவதற்கு இல்லை என ரசிகர்கள் கூறுகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X