நடிகை சுகன்யாவுக்கு விஐபியுடன் நெருக்கம்?.. பற்ற வைத்த வீரப்பன்.. 10 லட்சம் நஷ்ட ஈடு பெற்ற நடிகை
சென்னை: 90களில் சினிமாவுக்கு அறிமுகமனா சுகன்யா பல ஹிட் படங்களில் நடித்திருக்கிறார். சிறந்த நடிகை என்று பெயர் எடுத்த அவர் திடீரென திருமணமாகி செட்டிலானார். ஆனால் அந்தத் திருமண வாழ்க்கை பாதியிலேயே முடிந்ததை அடுத்து சிங்கிளாகவே இருக்கிறார். இதற்கிடையே அரசியல் புள்ளி ஒருவருடன் சுகன்யாவுக்கு திருமணத்தை மீறிய உறவு இருப்பதாக மறைந்த சந்தன கடத்தல் வீரப்பன் ஒரு பேட்டியில் பேசி பரபரப்பை கிளப்பியிருந்தார்.
பாரதிராஜா இயக்கத்தில் வெளியான புது நெல்லு புது நாத்து திரைப்படத்தில் ஹீரோயினாக அறிமுகமானவர் சுகன்யா. அவரது குடும்பம் சினிமா பின்னணியுள்ள குடும்பம்தான். அதிலும் இவர் சினிமாவுக்கு வருவதற்கு முன்பே பரதநாட்டியத்தில் செம ஃபேமஸ் ஆனவர் என்பவர் குறிப்பிடத்தக்கது. அடிப்படையில் பரதநாட்டிய கலைஞர் என்பதால் எக்ஸ்பிரெஷன்கள் உள்ளிட்ட விஷயங்களில் ஆன் கேமராவிலும் கலக்கினார் சுகன்யா.

பிஸியான நடிகை: இதன் காரணமாக முதல் படத்துக்கு பிறகு அடுத்தடுத்து அவருக்கு வாய்ப்புகள் கிடைத்தன. அதன்படி விஜயகாந்த்துடன் சின்னகவுண்டர், கமல்ஹாசனுடன் மகாநதி, சத்யராஜுடன் திருமதி பழனிச்சாமி, வால்டர் வெற்றிவேல் என எக்கச்சக்க ஹிட் படங்களில் நடித்தார். குண்டு விழிகள், சூப்பர் அழகு, அசத்த வைக்கும் திறமை உள்ளிட்டவை அவருக்கு இருந்ததால் எந்த ரோல் கொடுத்தாலும் அசத்தினார்.
கமலுக்கு இணையாக: ஷங்கர் இயக்கத்தில் உருவான இந்தியன் படத்தில் கமல்ஹாசனுக்கு ஈடாக சுகன்யாவுக்கும் மேக்கப் ரொம்பவே அசத்தலாக போடப்பட்டிருந்தது. அவரும் அதில் சிறப்பாகவே நடித்திருந்தார். இருப்பினும் கமலுக்கு போடப்பட்ட மேக்கப் பேசப்பட்டது, கொண்டாடப்பட்டது மாதிரி சுகன்யா பேசப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. இருப்பினும் தொடர்ந்து தன் கடன் பணி செய்து கிடப்பதே என்பது போல் வேலைகள் செய்தார்.
திருமணம் டூ பிரிவு: அவரது கரியர் நல்லபடியாக போன சூழலில் திடீரென திருமணம் செய்துகொண்டு வெளிநாட்டில் செட்டில் ஆனார். ஆனால் திருமணமான சில வருடங்களிலேயெ கணவன், மனைவிக்குள் பிரச்னை வந்ததால் விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டார்கள். அதற்கு பிறகு யாரையும் திருமணம் செய்துகொள்ளாத சுகன்யா இப்போதுவரை சிங்கிளாகவே இருக்கிறார். படங்களிலும் பெரிதாக நடிப்பதில்லை. அவர் மீண்டும் நடிக்க வந்தால் நன்றாக இருக்கும் என ரசிகர்கள் கருதுகிறார்கள்.
வீரப்பன் கிளப்பிய பகீர்: இதற்கிடையே 90களில் சத்தியமங்கலம் வன பகுதிகளில் தனி அரசாங்கமே நடத்திக்கொண்டிருத சந்தன கடத்தல் வீரப்பனை; மூத்த பத்திரிகையாளர் நக்கீரன் கோபால் ஒருமுறை (1996ஆம் ஆண்டு) பேட்டியெடுத்தார். அப்போது பேசிய வீரப்பன், 'முன்னாள் பிரதமர் நரசிம்ம ராவின் மகனுக்கும், சுகன்யாவுக்கும் இடையே திருமணத்தை மீறிய உறவு இருக்கிறது' என சொல்லி பகீர் கிளப்பினார். அந்தப் பேட்டி சன் டிவியிலும் ஒளிபரப்பானது.
நீதிமன்றம் அதிரடி: அதை பார்த்து அதிர்ச்சியடைந்த சுகன்யா, 'அந்தப் பேட்டியால் என்னுடைய நற்பெயருக்கு களங்கம் வந்துவிட்டது. எனது சினிமா வாய்ப்புகளும் பாதிக்கப்பட்டன. மன உளைச்சலும் ஏற்பட்டது. எனவே எனக்கு பத்து லட்சம் ரூபாய் சன் டிவி நஷ்ட ஈடு வழங்க வேண்டும்' என வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு கடந்த 30 வருடங்களுக்கும் மேலாக விசாரிக்கப்பட்டது. இந்நிலையில் சென்னை உயர் நீதிமன்றம் அளித்திருக்கும் உத்தரவில், 'சுகன்யாவுக்கு சன் டிவி தரப்பிலிருந்து 10 லட்சத்து 500 ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும்' என குறிப்பிடப்பட்டிருக்கிறது.


Click it and Unblock the Notifications
