அழகான ராட்சசியே அடி நெஞ்சில் குதிக்கிறியே.. வேட்டையன் நடிகை துஷாரா விஜயனின் கலக்கல் பிக்ஸ்!
சென்னை: இயக்குநர் பா. ரஞ்சித்தின் ஃபேவரைட் நடிகையான துஷாரா விஜயன் சார்பட்டா பரம்பரை, நட்சத்திரம் நகர்கிறது ஆகிய படங்களின் மூலம் பிரபலமானார். தற்போது இவர் ரஜினிகாந்தின் வேட்டையன் படத்தில் நடித்து வருவதால், ரஜினி ரசிகர்களின் ஒட்டு மொத்த பார்வையும் இவர் பக்கம் திரும்பி உள்ளதால், இன்ஸ்டாகிராமில் இவரின் பாலோவர்கள் கணிசமாக அதிகரித்துள்ளது. அவர்களை குஷிப்படுத்துவதற்காகவே விதவிதமான போட்டோக்களை அப்லோடு செய்து வருகிறார்.

பா ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா முரட்டு ஜிம் பாடியுடன் நடித்த பாக்ஸிங் படமான சார்பட்டா பரம்பரை படத்தில் ஹீரோயினாக மாரியம்மா எனும் கதாபாத்திரத்தில் நடித்து அறிமுகமானார் துஷரா விஜயன். அதன் பின்னர் மீண்டும் பா. ரஞ்சித் இயக்கத்தில் வெளியான நட்சத்திரம் நகர்கிறது படத்தில் ரெனே எனும் போல்டான நவநாகரீக பெண் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அவரது தைரியமான கதாபாத்திரத்திற்கு ஏகப்பட்ட விருதுகளும் பாராட்டுக்களும் கிடைத்தன.

நடிகை துஷாரா விஜயன்: அதே போல கடந்த ஆண்டு அருள்நிதி நடிப்பில் வெளியாகி வெற்றிப் பெற்ற கழுவேர்த்தி மூர்க்கன் படத்தில் ஹீரோயினாக நடித்த துஷாரா விஜயனுக்கு ஜாக்பாட் அடித்தது போல சூப்பர் ஸ்டார் ரஜின்காந்தின் வேட்டையன் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. ரஜினிகாந்தின் மகளாக நடிக்கிறார் என்றும் முக்கியமான கதாபாத்திரம் என ஏகப்பட்ட தகவல்கள் வெளியாகி உள்ளன. ஞானவேல் இயக்கத்தில் அமிதாப் பச்சன், பகத் ஃபாசில், ராணா டகுபதி, மஞ்சு வாரியர், ரித்திகா சிங் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் ரஜினியின் வேட்டையன் படத்தில் நடித்து அத்தனை பெரிய நடிகர்கள் உடனும் நடிக்கும் வாய்ப்பை தட்டித் தூக்கி உள்ளார்.

இணையத்தில் ஆக்டிவ்: இந்த நிலையில் நடிகை துஷாரா விஜயன் நடிப்பில் எவ்வளவு பிஸியாக இருக்கிறாரோ அதே அளவில் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார். அந்த வகையில் அண்மையில் கடற்கரையில் பிகினி ஆடையில் இருக்கும் புகைப்படங்களை இணையத்தில் பதிவிட்டு இருந்தார். இந்த பார்த்து ரசிகர்கள், சினிமாவிற்குள் வந்த கொஞ்ச நாளில் இவ்வளவு கவர்ச்சியா? என கருத்துக்களையும் பகிர்ந்து வந்தனர். ஆனால், தற்போது இவர், தங்க நிறத்தில் மினு மினுக்கும் சேலையில் இருக்கும் போட்டோவை வெளியிட்டு ரசிகர்களை திக்கு முக்காட வைத்துள்ளார்.



Click it and Unblock the Notifications











