வேட்டையன் ஹீரோயினின் அட்டகாசமான போஸ்.. பார்த்தாலே சும்மா ஜிவ்வுங்கதே!
சென்னை: ஏய்...சண்டக்காரா குண்டு முழியில...ரெண்டு உயிரத் தேடிப்பாயுது... என்ற பாடலுக்கு க்யூட்டாக ரியாக்ஷன் கொடுத்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார் ரித்திகா சிங். சுதா கொங்கரா இயக்கிய இறுதி சுற்று படத்தில் குத்துச்சண்டை வீராங்கனியாகவே நடித்திருந்தார். தற்போது படத்தில் பிஸியாக நடித்து வரும் இவர், இன்ஸ்டாகிராமில் கவர்ச்சி புகைப்படத்தை ஷேர் செய்துள்ளார்.
சுருட்டை முடியுடன், அழகான ரொமான்சுடன் முதல் படமான இறுதிச்சுற்றில் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்துவிட்டார். அந்த படத்தில் நடிகர் மாதவனுடன் ஜோடி போட்டு நடித்து ஸ்கோரை அள்ளினார் ரித்திகா சிங். குத்துச்சண்டை வீராங்கனியாக இருந்த போதும், எனக்கு பாக்ஸிங் மட்டும் இல்லை, நடிப்பும் வரும் என்பதை நிரூபித்தார். இப்படம் பாக்ஸ் ஆபிசில் ஹிட்டடித்து வசூலை அள்ளியது.

க்யூட்டான நடிப்பு: முதல் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து விஜய் சேதுபதியுடன் இணைந்து ஆண்டவன் கட்டளை திரைப்படத்தில் இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். அதன்பின், ராகவா லாரன்ஸுடன் இணைந்து சிவலிங்கா திரைப்படத்திலும் பேயாக நடித்திருந்தார். அசோக் செல்வனுடன் ஓ மை கடவுளே படத்தில் க்யூட்டான தோழியாக நடித்திருந்தார். பாக்ஸர், பிச்சைக்காரன் 2,வணங்கான்,கொலை போன்ற தமிழ் படங்களிலும் நடித்துள்ளார்.

கவர்ச்சி போட்டோஸ்: இணையத்தில் படுஆக்டிவாக இருக்கும் ரித்திகா சிங், கறுப்பு உடையில் முன்னழகை தெரியவிட்டு அட்டகாசமாக போஸ் கொடுத்துள்ளார்.. அந்த போட்டோவை பார்த்த ரசிகர்கள் பலர், அவரது அழகை வர்ணித்து கவிதை பாடி வருகின்றனர்.

இந்த போட்டோவை அப்லோடு செய்த சிறிது நேரத்திலேயே பல லட்சம் லைக்குகளை பெற்று வைரலாகி வருகிறது. இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த், அமிதாப் பச்சன், பகத் ஃபாசில், மஞ்சு வாரியர், ரானா டகுபதி, துஷாரா விஜயன் உள்ளிட்ட பிரபலங்கள் நடித்து வரும் வேட்டையன் படத்தில் ரித்திகா சிங்கும் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











