பா. ரஞ்சித் மேடையில் நாக சைதன்யாவின் 2வது மனைவி சோபிதா துலிபாலா.. அடடே இதுதான் காரணமா?
சென்னை: இயக்குநர் பா. ரஞ்சித் தமிழ் சினிமாவில் மிகவும் முக்கியமான இயக்குநர்களில் ஒருவர். தனது படங்கள் மூலம் தொடர்ந்து தமிழ் சினிமாவில் அரசியலை பேசுகிற முக்கியமான இயக்குநராக உள்ளார். இவர் சினிமா இயக்குவது மட்டும் இல்லாமல், படங்கள் தயாரிப்பது, நீலம் பண்பாட்டு மையம் என்ற அமைப்பின் மூலம் இயக்க அரசியலில் ஈடுபட்டு வருகிறார். இப்படி இருக்கும்போது, அவரது நீலம் பண்பாட்டு மையம் நடத்திய மார்கழியில் மக்களிசை நிகழ்ச்சியில் நடிகை சோபிதா துலிபாலா கலந்து கொண்டுள்ளார். அவருக்கு பா. ரஞ்சித் நினைவுப் பரிசு வழங்கினார். சோபிதா துலிபாலா கலந்து கொண்டதற்கு மிகவும் முக்கியமான காரணம் இருக்கிறது என்று திரைத்துறையில் பேச்சுக்கள் அடிபடுகிறது.
இயக்குநர் பா. ரஞ்சித் தற்போது வேட்டுவம் படத்தை இயக்கி வருகிறார். படத்தின் படப்பிடிப்பு பெரும்பாலும் முடிந்துவிட்டதாக கூறப்படுகிறது. படம் இந்த ஆண்டில் கட்டாயம் வெளிவரும் என்பதில் சந்தேகம் வேண்டாம். படத்தில் ஆர்யா, கலையரசன், கெத்து தினேஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். நடிகர் தினேஷ்க்கு பிறந்த நாள் வந்தபோது, அவருக்கு படக்குழு சார்பில் வெளியிடப்பட்ட வாழ்த்து வீடியோ ரசிகர்களுக்கு பெரும் சர்ப்ரைஸ் கொடுத்தது.
காரணம் தினேஷின் லுக், அவரது ஆக்ஷன் காட்சிகள், படக்குழு வெளியிட்ட சிறிய வீடியோவிலும் அவரது முரட்டுத்தனமான நடிப்பு உள்ளிட்ட பலவும் ரசிகர்களைக் கவர்ந்தது. இப்படி இருக்கும்போது, இந்த படத்தின் மீது ரசிகர்கள் பெரும் நம்பிக்கையை வைத்துள்ளனர். அதேபோல் ஆர்யாவின் லுக் ரசிகர்களுக்கு மேலும் நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் படத்தில் நடிகை சோபிதா துலிபாலாவும் நடித்துள்ளார். இந்த படத்தில் அவருக்கு மிகவும் முக்கியமான கதாபாத்திரம் கொடுக்கப்பட்டுள்ளது. வழக்கமாகவே, இயக்குநர் பா. ரஞ்சித்தின் படம் என்றால், படத்தில் பெண்கள் கதாபாத்திரம் மிகவும் வலிமையானதாகவும், தமிழ் சினிமாவில் ஏற்கனவே கட்டமைக்கப்பட்டுள்ள ஸ்டீரியோடைப்பை உடைப்பது போலவும் பெண் கதாபாத்திரங்கள் இருக்கும்.

மார்கழியில் மக்களிசை: இப்படி இருக்கும்போது நடிகை சோபிதா துலிபாலாவுக்கும் இந்த படத்தில் மிகவும் வலிமையான அதே நேரத்தில் மிகவும் முக்கியமான கதாபாத்திரம் கொடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதேபோல், பா. ரஞ்சித் இதுவரை தனது படங்களில் முயற்சிக்காத ஒரு விஷயத்தை இந்த படத்தில் நடிகை சோபிதா துலிபாலாவை வைத்து முயற்சித்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் அந்த காட்சி மிகவும் தரமாகவும், வித்தியாசமாகவும் உருவாக்கப்பட்டுள்ளது என்றும் கூறப்படுகிறது.
சோபிதா துலிபாலா: நடிகை சோபிதா துலிபாலாவைப் பொறுத்தவரை பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டு பாகங்களுக்குப் பின்னர், தமிழில் எந்த படத்திலும் கமிட் ஆகவில்லை. இப்படி இருக்கும்போது, பா. ரஞ்சித்தின் வேட்டுவம் படத்தில் கமிட் ஆனதற்கு காரணமே, அவரது கதாபாத்திரம் தானாம். மேலும் சோபிதா துலிபாலாவுக்கு இந்த படம் மிகப்பெரிய பெயரையும் பாராட்டுக்களையும் பெற்றுத் தரும் என்று அவர் நம்புகிறாராம். வேட்டுவம் படத்திற்காக இருவரும் இணைந்து பணியாற்றிய போது ஏற்பட்ட நட்பின் காரணமாக சோபிதாவை மார்கழியில் மக்களிசை நிகழ்ச்சிக்கு பா. ரஞ்சித் அழைத்துள்ளார். தனது இயக்குநர் அழைத்ததால் மகிழ்ச்சியாக வந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார், சோபிதா. இது போன்ற நிகழ்ச்சிகளையும் முன்னெடுப்புகளையும் இயக்குநர் பா. ரஞ்சித் தொடர்ந்து செய்து கொண்டே இருக்க வேண்டும் என்று வாழ்த்தியுள்ளார்.


Click it and Unblock the Notifications











