வேட்டுவம் படத்தை புகழும் சோபிதா துலிபாலா.. பெரிய விருந்தாக அமையுமாம்.. மேடம் ஓபன் டாக்

சென்னை: பா. இரஞ்சித் இயக்கத்தில் கடைசியாக வெளியான தங்கலான் திரைப்படம் மோசமான தோல்வியை சந்தித்தது. விக்ரமும், இரஞ்சித்தும் உழைப்பை அதீதமாக கொட்டியிருந்தாலும்; ரசிகர்கள் படத்துடன் கனெக்ட் ஆகவில்லை. அடுத்ததாக அவர் வேட்டுவம் என்ற படத்தை இயக்கியிருக்கிறார். படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடந்துவருகின்றன. இந்நிலையில் வேட்டுவம் படம் பற்றி சோபிதா துலிபாலா பேசியிருக்கும் விஷயம் கவனத்தை ஈர்த்திருக்கிறது.

இந்திய அளவில் முக்கியமான இயக்குநர்களில் ஒருவர் பா.இரஞ்சித். அவர் வந்த பிறகுதான் கோலிவுட்டில் தலித்துகளின் குரலும், வாழ்வியலும் திரைப்படங்களிலும் நல்லவிதமாக காண்பிக்கப்படுகின்றன. அதுவரை தலித்துகள் என்றாலே அடிமைத்தனத்தில் இருப்பவர்கள் உள்ளிட்ட காட்சிகளால் நிரம்பி வழியும். இரஞ்சித் இயக்கும் படங்கள் ஒவ்வொன்றும் ஏதோ ஒரு விவாதத்தை கிளப்பிவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.

Vettuvam Is an Incredible Sci-Fi Film Sobhitha Dhulipala Praises Pa Ranjith s Next
Photo Credit:

எல்லோருக்குமே கனவு: இரஞ்சித்தின் இயக்கத்தில் எப்படியாவது நடித்துவிட வேண்டும் என பல நடிகர்கள் காத்திருக்கிறார்கள். ஆனால் அவரைப் பொறுத்தவரை கதைக்கு யார் தேவையோ அவர்களைத்தான் தன்னுடைய படங்களில் நடிக்க வைப்பார். கடைசியாக அவர் இயக்கத்தில் தங்கலான் திரைப்படம் வெளியானது. விக்ரம் ஹீரோவாக நடித்திருந்தார். முதன்முறையாக அவர்கள் இரண்டு பேரும் சேர்ந்திருந்ததால் படத்தின் மீது எக்கச்சக்க எதிர்பார்ப்பு எழுந்திருந்தது.

Also Read
லோகேஷ் கனகராஜின் எல்சியூவில் ரவி மோகன்.. வரவேற்புலாம் பலமாக இருக்கே
லோகேஷ் கனகராஜின் எல்சியூவில் ரவி மோகன்.. வரவேற்புலாம் பலமாக இருக்கே

தோல்வியடைந்த படம்: ஆனால் படம் படுதோல்வியை சந்தித்தது. காரணம் பா. இரஞ்சித்தின் மேக்கிங். இரஞ்சித் படங்களில் இருக்கக்கூடிய வழக்கமான எல்லா விஷயங்களும் அப்படத்தில் இடம்பெற்றிருந்தன என்றாலும்; அதை அவர் உருவாக்கிய விதங்கள் ரசிகர்களுடன் கனெக்ட் ஆகவே இல்லை. இதனால்தான் படம் படுத்துவிட்டது. இந்தப் படம் ஆஸ்கருக்கு அனுப்பப்படும் என்றெல்லாம் ரிலீஸுக்கு முன்னர் படக்குழு சொல்லியிருந்தது குறிப்பிடத்தக்கது.

அடுத்த படம்: அடுத்ததாக இரஞ்சித்தின் இயக்கத்தில் வேட்டுவம், சார்பட்டா பரம்பரை 2 ஆகிய படங்கள் வரவிருக்கின்றன. இவற்றில் வேட்டுவம் படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடந்துவருகின்றன. இதில் அட்டகத்தி தினேஷ், கலையரசன், சோபிதா துலிபாலா உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள். இதன் ஷூட்டிங்கில்தான் விபத்தெல்லாம் நடந்து உயிரிழப்பும் ஏற்பட்டது. படமானது விரைவில் ரிலீஸாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் படம் குறித்து சமீபத்திய பேட்டியில் சோபிதா துலிபாலா பேசியிருக்கிறார்.

சோபிதா சொன்னது: அந்தப் பேட்டியில் அவர், "வேட்டுவம் அற்புதமான திரைப்படம். எனக்கு அறிவியல் புனைகதைகள் ரொம்பவே பிடிக்கும். இந்தப் படம் கண்ககளுக்கு விருந்தாக இருக்கும். வேட்டுவம் பிரமாண்டமான காட்சி படைப்பாகும். பா.இரஞ்சித்துடன் இன்னொரு படத்தில் பணியாற்ற வேண்டியிருந்தது. ஆனால் அது நடக்கவில்லை. பொன்னியின் செல்வன் படத்தில் கொஞ்சம் மட்டும் நடனம் ஆடியிருந்தேன். இதில் அப்படி இல்லை. முழு எனர்ஜியுடன் ஆடியிருக்கிறேன்" என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X