விஜய்யுடன் நடித்த அனுபவம்.. எனக்கு சிரிப்புதான் வந்தது.. விசித்ரா இப்படி சொல்லிருக்காங்களே
சென்னை: நடிகை விசித்ரா கோலிவுட் மற்றும் டோலிவுட்டில் குறிப்பிடத்தக்க நடிகைகளில் ஒருவராக வலம் வந்தவர். ஏராளமான படங்களில் நடித்திருக்கும் அவர் கிளாமர் ரோல்களுக்கு பெயர் போனவர். ஒருகட்டத்தில் சினிமாவிலிருந்து ஒதுங்கிய அவர்; திருமணம் செய்துகொண்டு செட்டிலானார். பிறகு சின்னத்திரையில் நடிக்க ஆரம்பித்த அவர் பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஏழாவது சீசனிலும் கலந்துகொண்டார்.
நடிகை விசித்ரா தலைவாசல் படத்தின் மூலம் அறிமுகமானார். அதன் பிறகு 90களில் பிரபலமான நடிகையாக வலம் வந்தவர். காமெடி மற்றும் கிளாமர் ரோல்களில் நடித்துவந்தார். ஆனால் திடீரென சினிமாவிலிருந்து ஒதுங்கி திருமணம் செய்துகொண்டார். அதன் பிறகு பல வருடங்கள் ஒதுங்கியே இருந்த அவர் சில வருடங்களுக்கு முன்பிலிருந்து சின்னத்திரையில் என்ட்ரி கொடுத்தார்.
பிக்பாஸ் 7: கடந்த 2023ஆம் வருடம் நடந்த பிக்பாஸ் ஏழாவது சீசனில் கலந்துகொண்டிருந்தார் விசித்ரா. அந்த நிகழ்ச்சியில் தன்னால் முடிந்த அளவுக்கு சிறப்பாகவே விளையாடினார். அவருக்கென்று ரசிகர் பட்டாளமும் உருவானது. வீட்டில் இருந்தபோது தன்னைவிட வயதில் குறைந்தவர்கள் மீது அக்கறை எடுத்துக்கொண்டதாகட்டும்; மனதில் பட்டதை பேசுவதாகட்டும் அனைத்திலுமே தனக்கென தனி பாணியை உருவாக்கினார்.

பூகம்பம் கிளப்பிய விசித்ரா: அந்த சீசனில் பெரிய பரபரப்பை கிளப்பியது என்றால் பூகம்பம் டாஸ்க்தான். அதில் தங்கள் வாழ்க்கையில் பூகம்பத்தை ஏற்படுத்திய சம்பவங்களை போட்டியாளர்கள் பேச வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அதில் பேசிய விசித்ரா, 'நான் தெலுங்கு படத்தில் நடித்தபோது ஒரு நடிகர் எனது பெயரைகூட தெரிந்துகொள்ளாமல் நைட் ரூமுக்கு அழைத்தார்' என்று கூறினார். அதனையடுத்து யார் அந்த நடிகர் என்று நெட்டிசன்கள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டார்கள்.
அந்த நடிகர் பாலைய்யா: ஒருகட்டத்தில் விசித்ராவை ரூமுக்கு அழைத்த நடிகர் பாலைய்யாதான் என்ற முடிவுக்கு ரசிகர்கள் வந்து; அவரை கடுமையாக விமர்சனம் செய்தார்கள். விசித்ரா அப்படி பேசியது பலரிடமும் அனுதாபத்தையும், வரவேற்பையும் பெற்றுக்கொடுத்தது. பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியே வந்த விசித்ரா அடுத்ததாக குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்றார். அந்த நிகழ்ச்சியிலும் தன்னால் முடிந்த அளவுக்கு சிறப்பாகவே செயல்பட்டார். பிக்பாஸ் மற்றும் குக் வித் கோமாளி ஆகிய இரண்டு நிகழ்ச்சிகளால் விசித்ரா மீண்டும் லைம் லைட்டுக்கு வந்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
விசித்ரா பேச்சு: இந்நிலையில் சமீபத்தில் அவரை கௌரவிக்கும் நிகழ்ச்சி ஒன்று நடத்தப்பட்டது. அதில் விஜய்யுடன் நடித்த அனுபவத்தை நினைவுகூர்ந்தார். அவர் பேசுகையில், "ரசிகன் படத்தில் நானும் விஜய்யும் நடித்தோம். அப்போது அவரிடம் நார்மலாக பேச சொன்னாலே நான் நன்றாக நடிக்க முயற்சி செய்வேன். ஆனால் அவரிடம் குழந்தை மாதிரி கொஞ்சி பேச வேண்டும் என்று சொன்னார்கள். உடனே எனக்கு சிரிப்புதான் வந்தது" என்றார். விசித்ரா இப்போதும் சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரையில் நடிப்பதற்கு தயாராக இருப்பதாகவும்; கமிட்டாவதற்கான பேச்சுவார்த்தையில் இருப்பதாகவும் திரைத்துறையில் பேச்சுக்கள் எழுந்திருக்கின்றன.


Click it and Unblock the Notifications











