»   »  ஹீரோயின்

ஹீரோயின்

Subscribe to Oneindia Tamil

ஜொள்ளு குறித்து நடிகை விசித்திரா வித்தியாசமான விளக்கம் அளித்துள்ளார்.

சேலத்தில் நடந்த நடன நிகழ்ச்சி ஒன்றிற்காக சேலம் வந்திருந்தார் நடிகை விசித்திரா. சேலத்தில் நிருபர்களை சந்தித்தவர், நான் இதுவரை சுமார் 50 படங்களில்நடித்துள்ளேன். இதில் தலைவாசல், வில்லாதிவில்லன் போன்ற சில படங்கள் எனக்கு மிகவும் பிடிக்கும்.

இதுவரை நிறைவான கதாபாத்திரத்தில் நிடிக்கவில்லையே என்கிற ஏக்கம் உண்டு.

எதிர்காலம் பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று ஒரு நிருபர் கேட்க, அடுத்த நிமிடம் என்பது நம் கையில் இல்லை. எது வேண்டுமானாலும் நடக்கலாம்.எதிர்காலத்தைப்பற்றி ஏதும் சொல்ல முடியாது.

எல்லாம் ஆண்டவன் எழுதிய விதிப்படிதான் நடக்கும். எல்லாத்துக்கும் ஆண்டவன் அணுக்கிரகம் வேண்டும் என்றவர் பொதுவான நாட்டு நடப்புகள் பற்றிகவலைப்பட்டார்.

நாட்டில் வறுமை ஒழிய வேண்டும். அதற்கு காரல் மார்க்ஸின் கம்யூனிஸக் கொள்கைகளை அமல் படுத்த வேண்டும். சொத்துக்கள் ஒருவரிடமேகுவிந்திருப்பதை தடுத்து அனைவருக்கும் பிரித்து வழங்கப்படவேண்டும்.

கல்வி அறிவில் வளர்ச்சி பெற கல்வியமைப்பில் அடிப்படை மாற்றம் கொண்டு வரவேண்டும். வெளிநாடுகளில் இருப்பது போன்று 5 வயது நிரம்பியசிறுவனுக்கு 10 - ம் வகுப்பு படிக்கும் அறிவிருந்தால் அந்த கல்வி அளிக்கப்படுகிறது. அது போன்ற கல்வி அளிக்கப்படவேண்டும்.

அறிவுக்கேற்ற கல்வி அவசியம். செக்ஸ் கல்வி பெரியவர்களுக்குத்தான் அளிக்கப்படவேண்டும். சிறியவர்களுக்கு செக்ஸ் அறிவு நன்றாகவேஇருக்கிறது.

அது சரி விசித்திரா, ஜொள்ளு பற்றி உங்கள் கருத்து என்ன ? என்று ஒரு நிருபர் கேட்டு வைக்க, சிரித்தபடியே ஆண்கள் விடும் ஜொள்ளு வெளியில் தெரிந்துவிடும். பெண்கள் விடும் ஜொள்ளு வெளியில் தெரியாது என்றபடியே விடைபெற்றார் அந்த நடிகை.

Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil