பக்கத்து வீட்ல நடந்த அந்த விஷயம்.. எட்டிப்பார்த்து வாங்கிக் கட்டிய விடாமுயற்சி நடிகை.. என்ன ஆச்சு?

சென்னை: அஜித் குமார் நடித்து வரும் விடாமுயற்சி படத்தில் ஹீரோயினாக திரிஷா நடித்து வருகிறார். அந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகை ரெஜினா கசாண்ட்ரா நடித்து வருகிறார். சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் ரெஜினா கசாண்ட்ரா தனது வாழ்வில் மறக்க முடியாத அளவுக்கு அம்மாவிடம் மாட்டிய தருணம் பற்றி கூறி ரசிகர்களை கதிகலங்க வைத்துள்ளார்.

மாடலிங் மற்றும் விளம்பர படங்களில் நடித்து வந்த நிலையில் பிரசன்னாவின் கண்ட நாள் முதல் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் அறிமுகமானார் ரெஜினா கசாண்ட்ரா. தற்போது தமிழ், தெலுங்கு, இந்தி என பல்வேறு மொழிகளில் நடித்து வருகிறார்.

regina cassandra vidamuyarchi heroine

பாண்டிராஜ் இயக்கத்தில் விமல், சிவகார்த்திகேயன் நடித்த கேடி பில்லா கில்லாடி ரங்கா படம் அவருக்கு மிகப்பெரிய வரவேற்பை பெற்றுத் தந்தது. சமீபத்திய பேட்டி ஒன்றில் தான் அதிகப்படியான ரிலேஷன்ஷிப்பில் இருந்துள்ளதாக பேசிய ரெஜினா கசாண்ட்ரா பக்கத்து வீட்டில் எட்டிப் பார்த்தது குறித்தும் ஓபனாக பேசியுள்ளார்.

விடாமுயற்சிக்கு வெயிட்டிங்: அஜித் ரசிகர்களை போல விடாமுயற்சி படத்துக்கு நடிகை ரெஜினா கசாண்ட்ராவும் வெகு காலமாக காத்திருக்கிறார். சதீஷ் நடித்த கான்ஜூரிங் கண்ணப்பன் படத்தில் பேயோட்டும் பெண்ணாக இவர் நடித்திருந்தார். தமிழ் சினிமாவில் ஹீரோயினாக நடிக்காமல் துணை கதாபாத்திரங்களில் நடித்து வரும் ரெஜினா கசாண்ட்ரா மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் நடித்துள்ள விடாமுயற்சி படத்திலும் துணை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

regina cassandra vidamuyarchi heroine

ஏகப்பட்ட ரிலேஷன்ஷிப்: பொதுவாகவே நடிகைகள் டேட்டிங் பற்றியும் பர்சனல் விஷயங்கள் பற்றி பொதுவெளியில் பேசாமல் ரொம்பவே சமத்துப் பெண்களாக காட்டிக் கொள்வார்கள். ஆனால், அதைப்பற்றி எல்லாம் கவலைப்படாமல் உண்மையை பளிச்சென வெளிப்படையாக பேசும் ரெஜினா கசாண்ட்ரா தான் ஏகப்பட்ட ரிலேஷன்ஷிப்பில் இருந்ததாக சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியிருந்தார்.

பக்கத்து வீட்டை எட்டிப் பார்த்து: நடிகை ரெஜினா கசாண்ட்ராவிடம் எப்போதாவது ரொம்பவே சொல்ல முடியாத அளவுக்கு ஒரு விஷயத்தில் மாட்டிக் கொண்டு பெற்றோரிடம் சிக்கியிருக்கீங்களா என்கிற கேள்வி எழுப்பப்பட்ட நிலையில், அந்த கேள்வியை தவிர்த்து விடாமல், ஆம் மாட்டியுள்ளேன், ஒரு முறை பக்கத்து வீட்டில் எட்டிப் பார்த்த போது அம்மாவிடம் மாட்டி வசமாக வாங்கிக் கட்டிக் கொண்டேன் என்றார். பக்கத்து வீட்டில் என்ன பார்த்தீங்க என்கிற கேள்விக்கு அதெல்லாம் உங்களுக்கு தேவையில்லாத விஷயம் சொல்ல முடியாது என சிரித்துக் கொண்டே பேசி பதிலளித்துள்ளார். அந்த வீடியோவை ரசிகர்கள் அதிகம் சோஷியல் மீடியாவில் ஷேர் செய்து என்னவா இருக்கும் என கேள்வி எழுப்பி கலாய்த்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X