Keerthy Suresh - எத்தனை கிஸ் கொடுத்திருக்கேன் ஒன்னே ஒன்னு கொடுடா.. கீர்த்தி சுரேஷ் கெஞ்சல்

சென்னை: Keerthy Suresh (கீர்த்தி சுரேஷ்) முன்னணி நடிகையான கீர்த்தி சுரேஷ் சமீபத்தில் தசரா படத்தில் நடித்திருந்தார். அந்தப் படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் கீர்த்தி சுரேஷின் நடிப்புக்கு பலரும் தங்களது பாராட்டை தெரிவித்தனர். மேலும், படத்துக்கு படம் கீர்த்தியின் நடிப்பு மெருகேறிக்கொண்டே இருப்பதாகவும் ரசிகர்கள் புகழாரம் சூட்டும் சூழலில் அவர் முத்தம் கேட்ட வீடியோ ட்ரெண்டாகியுள்ளது.

தயாரிப்பாளரும், நடிகருமான ஜி.சுரேஷ்குமாருக்கும், நடிகை மேனகாவுக்கும் பிறந்தவர் கீர்த்தி சுரேஷ். திரைக்குடும்பத்தை சேர்ந்ததால் இவரும் திரைத்துறையில் நுழைந்தார். பைலட்ஸ், குபேரன் உள்ளிட்ட மலையாள படங்களில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார் கீர்த்தி. அதனையடுத்து மோகன்லால் நடித்த கீதாஞ்சலி படம் மூலம் நடிகையாக அறிமுகமானார்.

video of Keerthy Suresh asking kiss from her dog

தமிழில் கீர்த்தி சுரேஷ் அறிமுகம்: ஏ.எல்.விஜய் இயக்கத்தில் கடந்த 2015ஆம் ஆண்டு வெளியான படம் இது என்ன மாயம். விக்ரம் பிரபு ஹீரோவாக நடித்திருந்த அந்தப் படத்தில் நடித்ததன் மூலம் கீர்த்தி சுரேஷ் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானார். அந்தப் படம் ஹிட்டாகவில்லை என்றாலும் கீர்த்தி சுரேஷின் பக்குவமான நடிப்பு பரவலாக பேசப்பட்டது. இதனால் அடுத்தடுத்து தமிழ் பட வாய்ப்புகள் கிடைத்தன.

சென்சேஷ்னல் ரஜினிமுருகன்: சிவகார்த்திகேயனுடன் கீர்த்தி சுரேஷ் நடித்த ரஜினி முருகன் திரைப்படம் மெகா ஹிட்டானது. அந்தப் படத்தில் இடம்பெற்ற உன் மேல ஒரு கண்ணு பாடலில் கீர்த்தி சுரேஷின் எக்ஸ்பிரெஷன்ஸை பார்த்த ரசிகர்கள் எக்ஸ்பிரஸ் வேகத்தில் அவருக்கு ரசிகர்களாக மாறினர். இதனால் தொடர்ந்து ரெமோ, பைரவா உள்ளிட்ட பல தமிழ் படங்களில் ஹீரோயினாக நடித்து முன்னணி நடிகையாக மாறினார்.

தேசிய விருது வென்ற கீர்த்தி சுரேஷ்: நடிப்பு என்பது சாதாரணமில்லை. அதிலும் ஒருவரின் வாழ்க்கை வரலாற்றில் நடிப்பது மிகப்பெரிய காரியம். அப்படி நடிக்கும்போது யாரை பற்றிய படமோ அவராகவே மாறி கூடு விட்டு கூடு பாய வேண்டும். மகாநடி படத்தில் கீர்த்தி சுரேஷ் அதனை அசால்ட்டாக செய்தார். நடிகை சாவித்ரியின் வாழ்க்கை வரலாறு படமாக உருவான அதில் கீர்த்தி சுரேஷின் நடிப்பை பார்த்து வாயடைத்து போயினர். சாவித்ரியாகவே மாறிவிட்டார் எனவும் பாராட்டு மழை பொழியப்பட்டது. அதுமட்டுமின்றி அந்தப் படத்துக்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருதை பெற்றார் கீர்த்தி.

video of Keerthy Suresh asking kiss from her dog

குறைத்துக்கொண்ட கீர்த்தி சுரேஷ்: அந்தப் படம் கீர்த்தி சுரேஷுக்கு நல்ல பெயரை பெற்றுத்தந்தது. அதனை காப்பாற்றும் வகையில் அதற்கு அடுத்து கதை தேர்வில் கவனமாகவே இருந்துவருகிறார் கீர்த்தி. இடை இடையே கமர்ஷியல் படங்களில் நடித்தாலும் பென்குயின், மிஸ் இந்தியா என பெண்களை மையப்படுத்தி வந்த கதையிலும் நடிக்க ஆரம்பித்தார். சமீபத்தில் தசரா படத்தில் நடித்திருந்தார். படத்துக்கு கலவையான விமர்சனங்கள்தான் என்றாலும் கீர்த்தியின் நடிப்பு கவனத்தை ஈர்த்தது.

video of Keerthy Suresh asking kiss from her dog

கிஸ் கொடு ப்ளீஸ்: இந்நிலையில் கீர்த்தி சுரேஷ் கிஸ் கேட்கும் வீடியோ ஒன்று இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளது. தசரா படப்பிடிப்பின்போது தனது கேரவனுக்குள் இருக்கும் கீர்த்தி சுரேஷ் தனது செல்லப்பிராணியான நைக் நாயிடம் விளையாடிக்கொண்டிருக்கிறார். அந்த நாயை பிடித்து, உனக்கு நான் எத்தனை கிஸ் கொடுத்திருக்கிறேன். எனக்கு ஒன்னே ஒன்னு கொடுடா என கெஞ்சுகிறார். தற்போது இந்த வீடியோ இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளது. கீர்த்தி சுரேஷ் தமிழில் தற்போது மாமன்னன் படத்தில் நடித்து முடித்திருக்கிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X