காருக்குள் பண்ற விஷயமா இது..? துணிவு நாயகி மஞ்சு வாரியரின் அட்ராசிட்டி... ட்ரெண்டாகும் வீடியோ!
திருவனந்தபுரம்: அஜித்தின் துணிவு திரைப்படத்தில் கண்மணி கேரக்டரில் நடித்து மிரட்டியிருந்தார் மஞ்சு வாரியர்.
துணிவை அடுத்து மலையாளத்தில் வெளியான ஆயிஷா திரைப்படமும் மஞ்சு வாரியருக்கு ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றுக்கொடுத்தது.
தொடர்ந்து பல படங்களில் பிஸியாக நடித்து வரும் மஞ்சு வாரியர், சோஷியல் மீடியாக்களிலும் ஆக்டிவாக இருக்கிறார்.
இந்நிலையில், மஞ்சு வாரியரும் நடிகை பாவனாவும் காருக்குள் செய்த அட்ராசிட்டி வீடியோ ட்ரெண்டாகி வருகிறது

முன்னணி நடிகை மஞ்சு வாரியர்
மலையாளத்தில் முன்னணி நடிகையாக வலம் வரும் மஞ்சு வாரியர், தமிழில் அசுரன் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்திருந்தார். வெற்றிமாறன் இயக்கிய அசுரன் படத்தில், பச்சையம்மாள் என்ற கேரக்டரில் நடித்த மஞ்சு வாரியரின் நடிப்புக்கு கோலிவுட் ரசிகர்களிடம் மிகப் பெரிய வரவேற்பு கிடைத்தது. அதேபோல், மலையாளத்திலும் 2019ல் வெளியான லூசிபர், மரைக்காயர் அரபிக்கடலிண்டே சிம்ஹம், லலிதம் சுந்தரம், ஜேக் அன்ட் ஜில் என அடுத்தடுத்து சூப்பர் ஹிட் படங்களில் நடித்துள்ளார்.

காரில் செம்ம அட்ராசிட்டி
இந்நிலையில், பொங்கலுக்கு வெளியான அஜித்தின் துணிவு படத்தில் கண்மணி கேரக்டரில் நடித்திருந்தார் மஞ்சு வாரியர். அஜித்துடன் ஆக்ஷனில் மிரட்டிய மஞ்சு வாரியருக்கு கோலிவுட்டில் இன்னும் கிரேஸ் கூடியது. இதனைத் தொடர்ந்து மலையாளத்தில் வெளியான ஆயிஷா திரைப்படமும் மஞ்சு வாரியருக்கு பாசிட்டிவான விமர்சனங்களைப் பெற்றுக் கொடுத்தது. இந்நிலையில், மஞ்சு வாரியரும் பாவனாவும் காரில் அட்ராசிட்டி அடித்த வீடியோ வைரலாகி வருகிறது.
ட்ரெண்டாகும் வீடியோ
ஆயிஷா படத்தின் ஒரு பாடலுக்கு மஞ்சு வாரியரும் பாவனாவும் காருக்குள் செம்மையாக ஆட்டம் போட்டு என்ஜாய் செய்துள்ளனர். கார் டிரைவிங் செய்தபடியே மஞ்சு வாரியர் ஆட்டம் போட்டது ரசிகர்களிடம் லைக்ஸை அள்ளி வருகிறது. மேலும், இந்த வீடியோ ட்விட்டரிலும் ட்ரெண்டாகி வருகிறது. இதனிடையே அமீர் பள்ளிக்கல் இயக்கிய ஆயிஷா திரைப்படத்தில் நடித்துள்ள மஞ்சு வாரியருக்கு விருதுகள் கிடைக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

அஜித்துடன் பைக் ட்ரிப்
துணிவு படத்தின் ஷூட்டிங் நடைபெற்றுக் கொண்டிருந்த போது, அஜித்துடன் இணைந்து பைக் டூர் சென்றிருந்தார் மஞ்சு வாரியர். அஜித், மஞ்சு வாரியர் ஜோடியாக பைக்கில் வலம் வந்தது அப்போது வைரலானது. அதுமட்டும் இல்லாமல் அஜித்தை போல அவரும் பல லட்சம் மதிப்புடைய ஒரு BMW பைக் வாங்கி கெத்து காட்டினார். இந்நிலையில், தற்போது கார் உள்ளே மஞ்சு வாரியர் ஆட்டம் போட்ட வீடியோ மீண்டும் வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications











