Don't Miss!
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- News வேலூரில் ஜெயிக்கணுமாம்.. அவசர அவசரமாக மருத்துவமனையில் டிஸ்சார்ஜ் ஆன மன்சூர் அலிகான்!
- Automobiles சுஸுகி 2-வீலர் ஃபேக்ட்ரி நான்-ஸ்டாப்பா ரன் ஆகிட்டு இருக்கு!! ஸ்கூட்டர்களை தயாரிக்கவே நேரம் பத்தல!
- Lifestyle 12 ஆண்டுகளுக்கு பின் மேஷத்தில் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு பண மழை பொழியும்..
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
இந்திய திரைப்பட விழா தூதுவராக வித்யா பாலன் மீண்டும் நியமனம்
2013 ஆம் ஆண்டு, மே மாதம், ஆஸ்திரேலிய நாட்டின் மெல்போர்ன் நகரில் இந்தியத் திரைப்பட விழா நடக்கிறது.
மே மாதம் 3-ஆம் தேதி முதல் 15 ஆம் தேதி வரை இந்தியத் திரையுலகின் நூற்றாண்டு விழாக் கொண்டாட்டங்கள் நடைபெறவிருக்கின்றன. இவ்விழாவில் சென்ற நூற்றாண்டின் சிறந்த திரைப்படங்கள் காட்டப்படுகின்றன. இந்திய சினிமாவின் முதல் படமான 'ராஜா ஹரிச்சந்திரா'வும் இதில் இடம் பெறுகிறது.
இந்த நிகழ்ச்சியின் விளம்பரத் தூதுவராக, இரண்டாவது முறையாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
35 வயதான வித்யாபாலன் 'த டர்டி பிக்சர்' படத்தில் நடித்ததற்காக தேசிய விருதினைப் பெற்றவர்.
இந்திய திரைப்பட விழாவிற்கு விளம்பர தூதுவராக நியமிக்கப்பட்டது குறித்து அவர் கூறுகையில், " இந்த கவுரவம் எனக்கு மகிழ்ச்சியை தருகிறது. ஆஸ்திரேலியா எனனக்கு மற்றொரு வீடு மாதிரி. இந்த நிகழ்ச்சிக்கு விளம்பர தூதுவராக நீடிக்க ஆயுட்கால ஒப்பந்தம் செய்துகொள்ள விரும்புகிறேன்," என்றார்.
ஆஸ்திரேலியாவில் ஒரு சினிமா எடுக்கவும் ஆசையாக உள்ளதாம் வித்யாபாலனுக்கு.