'ஹாய் பிளிட்ஸ்'... 'கவருக்காக' வெட்கத்தில் ஜொலித்த வித்யா பாலன்!
மும்பை: ஹாய் பிளிட்ஸ் என்ற பத்திரிக்கையின் அட்டைப் படத்திற்காக கவர்ச்சியும், வெட்கமும், களையும் பொங்க போஸ் கொடுத்துள்ளார் வித்யா பாலன்.
சேலையில் படு ரகளையாக போஸ் கொடுத்துள்ளார் வித்யா பாலன். அக்டோபர் இதழுக்கான அட்டைப் படத்திற்காக இந்த போஸ் கொடுத்துள்ளார் வித்யா பாலன்.
பிரைட் ரீவிசிட்டட் என்ற தலைப்பில் இந்தப் புகைப்படங்கள் எடுக்கப்பட்டுள்ளன.

டிரஸ்ஸிங் சென்ஸ் இல்லாதவர்
பொதுவாக வித்யா பாலனுக்கு டிரஸ்ஸிங் சென்ஸ் இல்லை என்று சொல்வார்கள். ஆனால் சில நேரங்களில் அவரது டிரஸ்ஸிங் ஸ்டைல் படு கலக்கலாக இருக்கும்.

ஹாய் பிளிட்ஸுக்காக
தற்போது ஹாய் பிளிட்ஸ் பத்திரிக்கைக்காக போஸ் கொடுத்துள்ளார் வித்யா பாலன். பார்க்கவே படு ரம்யமாக இருக்கிறது போஸ்கள் அத்தனையும்.

வெட்கத்தில் குளித்த அழகு முகம்
அழகான முகத்தில் அசத்தல் வெட்கம் புடை சூழ ரொம்ப நளினமாக போஸ் கொடுத்துள்ளார் இந்தப் பத்திரிக்கைக்காக வித்யா பாலன்.

டர்ட்டியாவே இல்லையே...
இந்தப் படங்களில் கொஞ்சம் கூட கவர்ச்சி இல்லை. ஆனால் ஒரு மணப்பெண்ணின் வெட்கப் புன்னகையும், கூச்ச சந்தோஷமும் பொங்கி வழிகிறது.

அக்டோபர் இதழுக்காக
அக்டோபர் மாத இதழுக்காக இந்த அழகு போஸ்களைக் கொடுத்துள்ளார் வித்யா பாலன்.


Click it and Unblock the Notifications