வித்யாபாலன் ஒரு பெண் அமீர்கான்!
மும்பை: வித்யாபாலன் ஒரு பெண் அமீர் கான் மற்றும் பச்சன் என பிரபல டைரக்டர் அனுராக் கஷ்யப் பாராட்டியுள்ளார்.
கடந்த 3 வருடங்களாகவே தேடித்தேடி நல்ல கேரக்டர் ரோல்களை தேடித் தேடி நடித்து வருகிறார் வித்யாபாலன் என்பது குறிப்பிடத்தக்கது. ஆர்.பால்கியின் பா(Paa), விஷால் பரத்வாஜின் இஸ்கியா, ராஜ் குமார் குப்தாவின் நோ ஒன் கில்ட் ஜெசிகா ஆகிய அனைத்து படங்களுமே வித்யா அவரது நடிப்புத்திறனை முழுமையாக வெளிப்படுத்த அமைந்த நல் வாய்ப்புகள் என்றே கூற வேண்டும்.
தி டர்டி பிக்சர்ஸ் திரைப்படத்திற்காக தேசிய விருது பெற்றுள்ள நடிகை வித்யாபாலன் நடிப்பில் இம்பிரஸ் ஆன அமீர் கான் அவருடன் நடிக்க விரும்புவதாக தெரிவித்துள்ளாராம். இந்நிலையில் அனுராக் வித்யாபாலனது நடிப்பை பின்வருமாறு புகழ்ந்துள்ளார்.

ரசிகர்கள் பலவிதம்...
வித்யாவைப் போன்ற நடிகைகள் மேலும் பலர் திரைத்துறையில் உருவாக வேண்டும் என்பதே என் ஆசை. பொதுவாக ஆண் நடிகர்களுக்கு அதிக சம்பளம் மற்றும் அதிக ரசிகப் பட்டாளம் காணப்படுகிறது. கதாநாயகிகளுக்கு அப்படி அமைவதில்லை. ஆனால், வித்யாபாலன் இதிலிருந்து மாறுபட்டிருக்கிறார்.

ஆண் அமீர்கான்...
நடிப்பிலும், ரசிகப்பட்டாளத்திலும் அவர் பெண் அமீர் கான் மற்றும் பச்சன் போன்று ஜொலிக்கிறார்.

ஆண்கள் உலகம்...
திரைப்படத்துறையில் மட்டுமல்ல, நாம் ஆணாதிக்க சமூகத்தில் தான் வாழ்ந்து வருகிறோம். ஆனால் இந்தியா மக்களின் போக்கை படிப்படியாக மாற்ற முயற்சி மேற்கொண்டுள்ளது பாராட்டப் பட வேண்டியது என்று கூறியுள்ளார்.

பாலிவுட்டே புகழுது...
நாளுக்கு நாள் மெருகேறிக் கொண்டே இருக்கும் அவரது நடிப்பை பார்த்த பாலிவுட் பட உலகம் அவரை பெண் அமீர்கான் என் அடைமொழி வைத்து அழைக்கிறதாம். காரணம், வித்யாபாலன், அமீர்கானுக்கு நிகராக எல்லாவற்றிலும் பெர்பெக்ஷன் எதிர்பார்ப்பாராம்!

அமீருக்கும் ஆசை...
இதனாலேயே என்னவோ, அமீர்கான், வித்யாபாலனுடன் நடித்தே ஆக வேண்டும் என ஒற்றைக் காலில் நிற்கிறாராம்.


Click it and Unblock the Notifications











