மனசெல்லாம் நிறைஞ்சு போச்சு.. வித்யா பாலன் சந்தோஷம்!
எத்தனையோ படங்களில் அற்புதமாக நடித்திருந்தும் கூட வித்யா பாலனுக்கு இதற்கு முன்பு எந்த விருதும் கிடைத்ததில்லை. ஆனால் நம்ம ஊர் சில்க் ஸ்மிதா வேடத்தில் அவர் கலக்கியிருந்த தி டர்ட்ச்சி பிக்சர்ஸ் படத்திற்காக தேசிய அளவில் சிறந்த விருது கிடைத்திருப்பது அவரை உச்சி குளிர வைத்துள்ளதாம்.
இதுகுறித்து வித்யா கூறுகையில்,
சர்வதேச மகளிர் தினத்தின்போது இந்த விருது கிடைத்துள்ளது. ரொம்பப் பெரு்மையாக உள்ளது. கனவு மாதிரியே இருக்கு. நம்பவே முடியவில்லை. கர்வமாகவும் இருக்கிறது.
சில்க் ஸ்மிதா வேடத்தில் நடிக்காதே என்றுதான் பலரும் என்னிடம் சொன்னார்கள். நான்தான் இதை சவாலாக எடுத்து நடித்தேன். நடிக்கும்போதுதான் பெரும் சவாலாக உணர்ந்தேன். இருந்தாலும் தொடர்ந்து நடித்தேன். இப்போது அதற்கு பரிசும், அங்கீகாரமும் கிடைத்துள்ளது.
உண்மையில் நான் சில்க்காகவே என்னை உணர்ந்து, உணர்வுப்பூர்வமாக நடித்ததால் கிடைத்த வெற்றிதான இது. வழக்கமாக ஆர்ட் படங்களுக்குத்தான் விருது கிடைக்கும். ஆனால் அதை அப்படியே மாற்றி, கமர்ஷியல் படங்களும் வாங்க முடியும் என்பதை டர்ட்டி பிக்சர்ஸ் நிரூபித்துள்ளது.
மனசெல்லாம் நிறைந்து போய் இருக்கிறேன். ரொம்ப சந்தோஷம் என்றார் வித்யா பாலன்.


Click it and Unblock the Notifications












