டிவிக்கு வரனுமா... அப்ப இந்தா பிடி கண்டிஷன்... வித்யா பாலன் பலே!

டெல்லி: நடிகை வித்யாபாலன் மீண்டும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்க தனக்கு விருப்பமில்லை எனத் தெரிவித்துள்ளார்.

பா, டர்ட்டி பிக்சர், கஹானி உள்ளிட்ட படங்களின் மூலம் தனது திறமையான நடிப்பை வெளிப்படுத்தியவர் நடிகை வித்யாபாலன். இவர் சிறந்தநடிகையாக தேசிய விருதும் வாங்கியுள்ளார்.

முன்னணி நடிகையாக வலம் வரும் வித்யாபாலன், சின்னத்திரை மூலமாகத் தான் தனது நடிப்புலக வாழ்க்கையைத் துவக்கினார். கடந்த 1995ம் ஆண்டு ஹும் பாஞ்ச் என்ற நகைச்சுவை நிகழ்ச்சி மூலமாக சின்னத்திரையில் அறிமுகமானவர் வித்யாபாலன். இதில் ஐந்து சகோதரிகளுள் ஒருவராக அவர் நடித்திருந்தார்.

சினிமா பிரவேசம்...

சினிமா பிரவேசம்...

அதனைத் தொடர்ந்து 2005ம் ஆண்டு பரினீதா படம் மூலம் சினிமாவிற்குள் நுழைந்தார். ஆனால், அதற்குப் பிறகு அவர் டிவி நிகழ்ச்சிகள் எதிலும் நடிக்கவில்லை. ஆனால், தொடர்ந்து வித்யாபாலனிற்கு டிவி வாய்ப்புகள் வந்து கொண்டு தான் இருக்கிறதாம்.

திரும்பத் திரும்ப...

திரும்பத் திரும்ப...

இது தொடர்பாக வித்யா பாலன் கூறுகையில், 'டிவி நிகழ்ச்சித் தயாரிப்பாளர்கள் பலர் தொடர்ந்து என்னை இது தொடர்பாக அணுகி வருகிறார்கள். ஆனால், அவர்களின் வாய்ப்புகளை நான் மறுத்து விட்டேன். தற்கால டிவி நிகழ்ச்சிகள் பெரும்பாலும் சொன்னதையே திரும்பத் திரும்ப சொல்பவைகளாகத் தான் உள்ளன. அதனால் எனக்கு டிவி நிகழ்ச்சிகளில் எனக்கு ஆர்வம் இல்லை. டிவி நிகழ்ச்சிகளின் தரம் இன்னும் மேம்பட வேண்டும் என நினைக்கிறேன்' எனத் தெரிவித்துள்ளார்.

உலகத்தர நிகழ்ச்சிகள்...

உலகத்தர நிகழ்ச்சிகள்...

மேலும், டிவி நிகழ்ச்சிகள் உலக தரம் வாய்ந்தவைகளாக மேம்பட்டால், அதில் பங்கேற்பது குறித்து யோசிப்பேன் என்கிறார் அவர். அதாவது, மேட் மேன் அல்லது சிக்ஸ் பீட் அண்டர் போன்ற நிகழ்ச்சிகளாக இருந்தால் சந்தோஷமாக அதில் வித்யாபாலன் பங்கேற்பாராம். மற்றபடி சாதாரண நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் எண்ணம் எதுவும் வித்யாபாலனுக்கு இல்லையாம்.

இரண்டு ஐடியாக்கள்...

இரண்டு ஐடியாக்கள்...

சமீபத்தில் இரண்டு விவாத நிகழ்ச்சி குறித்த ஐடியாக்களோடு தயாரிப்பாளர்கள் வித்யாபாலனை அணுகி உள்ளனராம். அவை வித்யாபாலனுக்கு பிடித்திருந்ததால், அவற்றை மேலும் மேம்படுத்திக் கொண்டு வரும் படி அவர் கூறியுள்ளாராம்.

பிடித்தால் நடிப்பேன்

பிடித்தால் நடிப்பேன்

அவ்வாறு, தயாரிப்பாளர்கள் கொண்டு வரும் புதிய ஐடியா பிடித்திருந்தால் நிச்சயமாக அந்த விவாத நிகழ்ச்சிகளில் பங்கேற்பாராம் வித்யாபாலன்.

எப்படியோ, கூடிய சீக்கிரம் வித்யாபாலனுக்கு டிவிக்கு வரப் போறார்ங்கறது நிச்சயம் !

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X