துணிச்சலான நடிப்பு.. மம்மூட்டி போல எந்த ‘கான்’களும் நடிக்க மாட்டார்கள்.. வித்யா பாலன் புகழாரம்!

சென்னை: இயக்குநர் ஜோ பேபி இயக்கத்தில் மம்மூட்டி, ஜோதிகா நடிப்பில் வெளியாகி சர்ச்சையை கிளப்பிய திரைப்படம் காதல் தி கோர். இந்த படத்தில் மம்மூட்டி தன் பாலின ஈர்ப்பாளராக நடித்திருந்தார். இது பெரும் சர்ச்சைக்குள்ளான நிலையில், நடிகை வித்யா பாலன், மம்மூட்டியை புகழ்ந்து பேசி உள்ளார்.

வங்கி ஊழியராக பணியாற்றி ஓய்வுபெற்ற மம்மூட்டி தன்னுடைய மனைவி ஜோதிகா மகள் ஃபெமி மற்றும் தன்னுடைய தந்தையுடன் வசித்து வருகிறார். மக்கள் மத்தியில் நல்ல அபிப்பிராயம் பெற்ற மம்மூட்டி தன்னுடைய ஊரில் நடக்கும் இடைத்தேர்தலில் நிற்க வைக்க முடிவு செய்யப்படுகிறது. இந்த நேரத்தில், மனைவி ஜோதிகா அவரிடம் விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்கிறார். தன் கணவன் தன் பாலின ஈர்ப்புக் கொண்டவர் என்பதை மறைத்து 20 ஆண்டுகள் தன்னுடன் குடும்பம் நடத்தி தன்னை ஏமாற்றியுள்ளதாக குற்றம் சாட்டுகிறார் ஜோதிகா.

Vidya Balan praised the Malayalam superstar Mammootty for Kaathal The Core

படத்தின் கதை: தன் மீதான குற்றச்சாட்டுகள் பொய்யாக வைக்கப்பட்டவை என்று வாதாடுகிறார் மம்மூட்டி. பல எதிர்ப்புகளையும் கடந்து ஜோதிகா இந்த விவாகரத்தை பெறுவதில் ஏன் இவ்வளவு முனைப்பு காட்டுகிறார்? இவர்களுக்கு விவாகரத்து கிடைத்தா என்பது தான் காதல் தி கோர் படத்தின் மீதிக் கதை. வித்தியாசமான கதைகளையும், கதாபாத்திரங்களையும் தேர்வு செய்து நடிக்கும் மம்மூட்டி, முதன் முறையாக தன்பாலின ஈர்ப்பாளராக நடித்திருந்தது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

நடிகை வித்யா பாலன்: இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பாலிவுட் நடிகை வித்யா பாலன், மம்முட்டி,ஜோதிகா நடித்த காதல் தி கோர் படத்தை பார்த்து வியந்து போனதாகவும், இந்த படத்தில் மம்மூட்டிட் நடித்த கதாபாத்திரம் போல இங்குள்ள எந்த கான்களாலும் நடிக்க முடியாது என்றார். கேரளத்தில் இலக்கியம் படிக்கும் மக்கள் அதிகம் என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும். அதற்கு மம்முட்டி நடித்த கதாபாத்திரத்தை அனைவரும் பாராட்டினார்கள். இது கேரளத்தில் சற்று எளிதானதாக பார்க்கப்படுகிறது. அவர்கர் அனைத்துவிதமான படங்களையும் திறந்த மனதுடன் ஏற்றுக்கொள்கிறார்கள் என்றார்.

துணிச்சலான நடிப்பு: தொடர்ந்து பேசிய அவர், தென்னிந்திய நடிகர்களை விடவும் அவர் சிறப்பாக நடித்து இருக்கிறார். மம்மூட்டி இந்த கேரக்டரில் நடித்தால், அனது தனது வழக்கமான ஹீரோயிஷம் பிம்பத்தை பாதிக்கும் என நினைக்காமல், துணிச்சலுடன் இந்த கதாபாத்திரத்தில் நடித்தது மட்டுமில்லாமல் இந்த படத்தை தயாரித்தும் இருக்கிறார். எனது ஆதரவு தன்பாலினத்தவருக்கு இருக்கு என்பதை மறைமுகமாக கூறியுள்ளார். துரதிஷ்டவசமாக எந்த ஹிந்தி நடிகரும் காதல் தி கோர் படத்தில் மம்மூட்டி நடித்தது போல, இங்கு எடுக்க மாட்டார்கள் என்று துல்கர் சல்மானுக்கு குறுஞ்செய்தி அனுப்பியதாகக் நடிகை வித்யா பாலன் மம்மூட்டியை புகழ்ந்து பேசி உள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X