»   »  முத்தத்திற்கு வித்யா பாலன் ரெடி

முத்தத்திற்கு வித்யா பாலன் ரெடி

Subscribe to Oneindia Tamil
Click here for more images
எனது படங்களில் எனக்கு கண்டிப்பாக முத்தக் காட்சி இடம் பெற வேண்டும் என்று வலிய வந்து கேட்கிறாராம் வித்யா பாலன்.

பாலிவுட்டில் பரவசத்தை ஏற்படுத்தி வருபவர் வித்யா பாலன். இவரை தமிழுக்குக் கொண்டு வர கமல் உள்பட பலரும் முயன்றும் இதுவரை முடியவில்லை.

மணிரத்னம் மட்டுமே இதில் வெல்ல முடிந்தது. அதுவும் கூட இந்தியில்தான். ஐஸ்வர்யாராய்-அபிஷேக்பச்சன் ஜோடியாக நடித்த மணிரத்னம் இயக்கிய குரு படத்தில் மாதவனுடன் ஜோடி போட்டு நடித்திருந்தார் வித்யா பாலன்.

படத்தில், மாதவனுக்கு மூச்சு திணற திணற பெவிகுயிக் விளம்பரம் போல நச்சென்று முத்தம் கொடுத்து அசத்தியிருந்தார். இந்த முத்தக்காட்சியை பார்த்து அபிஷேக் பச்சனே அசந்து விட்டாராம். அந்தக் காட்சி படமாக்கப்பட்டபோது வித்யாவையே பார்த்துக் கொண்டிருந்தாராம். ஆனால் அருகில் ஐஸ் இருந்ததால் ரொம்ப உணர்ச்சிவசப்படாமல் பார்த்துக் கொண்டாராம்.

வித்யாபாலன், தற்போது அதிரடியாக புதியதொரு அறிவிப்பையும் வெளியிட்டுள்ளார். அதில், தனக்கு யார் வாய்ப்பு தருவதாக இருந்தாலும் கண்டிப்பாக முத்தக்காட்சி ஒன்றை வைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளாராம்.

டூயட், கிளாமர் காட்சிகளில் மட்டுமில்லாமல் சோக காட்சிகளிலும் கண்டிப்பாக முத்தக் காட்சியை வைக்க வேண்டும் என்று படு தில்லாக கூறியுள்ளார்.

எந்த நடிகையாவது முத்தக்காட்சியில் நடிக்க சங்கோஜப்பட்டால் உடனே என்னை தேடி வாருங்கள். அந்த நடிகைக்கு பதில் முத்தக் காட்சிக்காக டூப் போடக் கூட நான் ரெடி என்று தடாலடியாக அறிவித்துள்ளார் வித்யா.

அடடா, முத்தத்திற்கு டூப் போட முன்வந்த ஒரே நடிகை இவர்தான் என்று பாலிவுட்காரர்கள் புல்லரித்துப் போயுள்ளனர்.

குத்தாட்டம் போல முத்தாட்டம் என்ற புதிய டிரெண்டுக்கு அடிகோலுகிறார் வித்யா என்று பேச்சு கிளம்பியுள்ளது.

இதுக்குத்தான் கமல் கடுமையாக முயன்றாரோ?!?

Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos