என் கணவருக்கும், புதுமுக நடிகைக்கும் தொடர்பா?: நடிகை வித்யா பாலன் விளக்கம்
மும்பை: தனது கணவர் சித்தார்த் ராய் கபூருக்கும், புதுமுக நடிகைக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்று நடிகை வித்யா பாலன் தெரிவித்துள்ளார்.
நடிகை வித்யா பாலன் பட வேலைகளில் பிசியாக வெளியூர், வெளிநாடு என்று சென்று கொண்டிருக்க அவரது கணவரும், தயாரிப்பாளருமான சித்தார்த் ராய் கபூருக்கும் புதுமுக நடிகை ஒருவருக்கும் நெருக்கம் ஏற்பட்டுள்ளது என்று செய்திகள் வெளியாகின. இந்த விஷயத்தால் வித்யாவுக்கும், அவரது கணவருக்கும் இடையே பிரச்சனை என்று கூறப்பட்டது.
ஆனால் தனது கணவருக்கும் புதுமுக நடிகை யாருக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்றும், தனது மணவாழ்வில் எந்த பிரச்சனையும் இல்லை என்றும் வித்யா தெரிவித்துள்ளார்.
முன்னதாக வித்யா பாலன் கர்ப்பமாக இருப்பதாகவும், அதனால் தான் புதுப்பட வாய்ப்புகளை ஏற்கவில்லை என்றும் கூறப்பட்டது. ஆனால் தான் கர்ப்பமாக இல்லை என்று வித்யா தெரிவித்து அந்த பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.


Click it and Unblock the Notifications












