அதற்காக ராசியில்லாதவள் என்றார்கள்..8 படங்களில் இருந்து திடீரென நீக்கினார்கள்..பிரபல நடிகை வருத்தம்

By

சென்னை: அந்த ஒரு காரணத்துக்காக தன்னை எட்டு படங்களில் இருந்து நீக்கியதாக பிரபல நடிகை வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.

பிரபல இந்தி நடிகை வித்யா பாலன். சஞ்சய் தத், சைஃப் அலிகான், நடித்த பரினீதா படம் மூலம் இந்தியில் அறிமுகமானவர்.

சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை கதையான, டர்ட்டி பிக்சர், கஹானி, துமாரி சுலு, பரினீதா, பா, மிஷன்மங்கள் உட்பட பல சிறந்த படங்களில் நடித்துள்ளார்.

நேர்கொண்ட பார்வை

நேர்கொண்ட பார்வை

ஆரம்பத்தில் தமிழில் நடிக்க வந்த அவர், ஒரு சில காரணங்களால் நிராகரிக்கப்பட்டார். இதனால், கோபத்தில் தமிழ்ப் படங்களில் நடிக்காமல் இருந்த வித்யாபாலன், மலையாளத்தில் நடித்து வந்தார். தெலுங்கில், சமீபத்தில் என்.டி.ஆர்.பயோபிக்கில், பாலகிருஷ்ணாவுடன் நடித்திருந்தார். பின்னர் பல வருடங்களுக்குப் பிறகு தமிழில், அஜித் ஜோடியாக, நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்தார்.

ராசியில்லாத நடிகை

ராசியில்லாத நடிகை

இப்போது உலகின் வேகமான மனிதக் கணினி என்று அழைக்கப்படும் சகுந்தலா தேவியின் வாழ்க்கைக் கதையில் நடித்துள்ளார். இந்த படம் ஓடிடி தளத்தில் கடந்த சில நாட்களுக்கு முன் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் தனது முதல் படம் பாதியிலேயே நின்றதால், ராசியில்லாத நடிகை என்று சினிமாவில் இருந்து ஒதுக்கியதாகக் கூறியுள்ளார் வித்யா பாலன்.

மோகன்லால் ஜோடி

மோகன்லால் ஜோடி

அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: முதல் படமாக, மலையாளத்தில் மோகன்லால் ஜோடியாக நடித்தேன். முதல் ஷெட்யூல் முடித்ததும் எனக்கு ஏழு, எட்டு பட வாய்ப்புகள் வந்தன. மகிழ்ச்சியாக இருந்தேன். என் முதல் படம் பாதியிலேயே நின்றுவிட்டது. இதனால் என்னை ஒப்பந்தம் செய்த நிறுவனங்கள் ஒதுக்கிவிட்டன. ராசியில்லாத நடிகை என்று முத்திரை குத்தினார்கள்.

கேலிக்குரிய விஷயம்

கேலிக்குரிய விஷயம்

எனக்குப் பதிலாக வேறு நடிகைகளை நடிக்க வைத்தார்கள். இது கேலிக்குரிய விஷயம். இதுபோன்ற நம்பிக்கை எனக்கு இல்லை. நான் மூடநம்பிக்கை கொண்டவள் இல்லை. இருந்தாலும் அந்தப் படங்களில் இருந்து நான் மாற்றப்பட்டபோது மனம் உடைந்தேன். இதையடுத்து தமிழில் ஒப்பந்தமான படத்தில் இருந்தும் நீக்கப்பட்டேன். நான் படங்களில் இருந்து நீக்கப்பட்டதும் எனக்கு வந்த கோபத்துக்கு அளவே இல்லை.

வாழ்க்கை மாறியது

வாழ்க்கை மாறியது

மிகவும் நொந்துவிட்டேன். உதவியற்றவளாக இருந்தேன். என் அம்மா, தியானம் மூலமும் பிரார்த்தனை மூலம் அமைதிப்படுத்த முயன்றார். ஏன் நீ பிரார்த்தனை பண்ணக் கூடாது என்று கேட்டுக்கொண்டே இருப்பார். பிறகு இயக்குனர் பிரதீப் சர்க்காரை சந்தித்த பின் தான் என் வாழ்க்கை மாறியது. அவர்தான் என்னை இசை ஆல்பத்திலும் பிறகு பரீனிதா படத்திலும் நடிக்க வைத்தார். இவ்வாறு நடிகை வித்யாபாலன் கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X