twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    தேசிய விருதையெல்லாம் திருப்பி கொடுக்க முடியாது - சொல்கிறார் நடிகை வித்யா பாலன்!

    |

    மும்பை: நாட்டில் நடக்கும் சம்பவங்களை கண்டித்து தேசிய விருதை விருதை திருப்பி கொடுக்க மாட்டேன் என்று நடிகை வித்யா பாலன் தெரிவித்துள்ளார்.

    நாட்டில் அதிகரித்து வரும் சகிப்பின்மை மற்றும் புனே எப்.டி.ஐ.ஐ கல்லூரி மாணவர்கள் விவகாரம் ஆகியவற்றை கண்டித்து திவாகர் பானர்ஜி, ஆனந்த் பட்வர்தன் உள்ளிட்ட 10 சினிமா டைரக்டர்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட தேசிய விருதுகளை திரும்ப ஒப்படைத்தனர்.

    Vidya Balan says she will not return her National Award

    இந்த நிலையில், நேற்று மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் நடிகை வித்யா பாலன் கலந்து கொண்டு பேசினார்.

    அப்போது, ‘‘நடக்கும் சம்பவங்களை கண்டித்து நான் தேசிய விருதை திரும்ப கொடுக்க மாட்டேன். இது நாட்டு மக்கள் தான் எனக்கு கொடுத்தார்களே தவிர அரசு அல்ல'' என்று கூறினார்.

    மேலும், தன்னுடைய அரசியல் ஈடுபாடு குறித்து கருத்து தெரிவித்த அவர், ‘‘அரசியலில் சேருவதில் எனக்கு ஆர்வம் இல்லை. அவ்வாறு சேர்ந்தால் மோசமான தோல்வியை சந்திப்பேன்'' என்றார்.

    Vidya Balan says she will not return her National Award

    தொடர்ந்து அவர் பேசுகையில், சமூக காரணங்களுக்காக செயல்படுவது ஒருவரது தனிப்பட்ட முடிவு. குறிப்பிட்ட காரணத்துக்காக போராடுமாறு யாரையும் கட்டாயப்படுத்த கூடாது என்றார்.

    நடிகை வித்யா பாலனுக்கு கடந்த 2012 ஆம் ஆண்டு தி டர்டி பிக்சர் படத்துக்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Bollywood star Vidya Balan today said she will not give back her national award as it was an honour bestowed on her by the country and not the government.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X