டான்ஸ் ஷோவின் நடுவராக இருக்க மறுத்த நடிகை வித்யா பாலன்
மும்பை: பாலிவுட் நடிகை வித்யா பாலன் டிவி நிகழ்ச்சி ஒன்றில் நடுவராக இருக்க வந்த வாய்ப்பை ஏற்க மறுத்துள்ளார்.
நடிகர், நடிகைகள் படங்களில் நடிப்பது தவிர்த்து தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை நடத்துவது, நடுவராக இருப்பது என்று பரபரப்பாக உள்ளனர். அவ்வாறு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள பெரிய தொகையையும் சம்பளமாக வாங்கிக் கொள்கிறார்.
இந்நிலையில் நடிகை வித்யா பாலன் தேடி வந்த ஒரு வாய்ப்பை ஏற்க மறுத்துள்ளார்.

நடுவர்
இந்தி தொலைக்காட்சியில் வரும் பிரபலமான நடன நிகழ்ச்சிக்கு நடுவராக இருக்குமாறு வித்யா பாலனை கேட்க அவரோ உடல் நலக்குறைவு காரணமாக அந்த வாய்ப்பை ஏற்க மறுத்துவிட்டார்.

ஜலக் திக்லா ஜா
ஜலக் திக் லா என்ற நடன நிகழ்ச்சியின் கடந்த சீசனில் நடிகை மாதுரி தீக்சித் நடுவராக இருந்தார். இம்முறை புதிய நடுவரை நியமிக்க நினைத்து வித்யாவிடம் கேட்டுள்ளனர்.

வித்யா
எனக்கு நடன நிகழ்ச்சியில் நடுவராக இருக்க வாய்ப்பு வந்தபோது எனது உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்தது. அதனால் அந்த வாய்ப்பை ஏற்கவில்லை என்று வித்யா தெரிவித்தார்.

படங்கள்
படங்கள், நடிப்பு தான் எனக்கு பிடித்தமானவை. புதிய திறமைசாலிகளை தேர்வு செய்யும் நிகழ்ச்சியாக இருந்தால் எனக்கு பிடிக்கும் என்றார் வித்யா.


Click it and Unblock the Notifications











