விளம்பரங்கள் முதல் வெள்ளித்திரை வரை அசத்தி வரும் வித்யா பிரதீப்
சென்னை: வித்யா பிரதீப் சென்னையில் இருந்து கொண்டு மாடலிங் செய்ய துவங்கினார். ஆரம்பத்தில் ஏ.ஆர்.ரகுமான் தயாரித்த 'ஆ பி ஜா' எனும் ஆல்பத்தில் நடித்திருந்தார் வித்யா பிரதீப். அதன் பிறகு மாடலிங் ஒரு புரம் படிப்பு ஒரு புரம் என்று இயங்கி கொண்டிருந்த வித்யாவிற்கு சில விளம்பரங்களில் நடிக்கும் வாய்ப்பும் கிடைத்தது.
இதே நேரத்தில் விளம்பரங்களை நேர்த்தியாக இயக்கும் இயக்குனர் ஏ.எல்.விஜயின் சைவம் படத்தில் 'தேன்மொழி' என்ற கதாபாத்திரத்திற்கு வாய்ப்பு கிடைத்தது. இதுவே வித்யா பிரதீப்புக்கு சினிமாவில் முதல் படம்.

இதற்கு பிறகு நடிகர் ஜீவன் நடித்த 'அதிபர்' படத்தில் ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருப்பார் வித்யா. அதற்கு பிறகு இயக்குனர் பாண்டிராஜ் இயக்கிய 'பசங்க 2' படத்தில் நடித்திருப்பார். அந்த கதாபாத்திரம் மூலம் மக்கள் மனதில் இடம் பிடித்தார். அதன் பிறகு ஒன்னுமே புரியல, அச்சமின்றி ஆகிய படங்களில் நடித்தார்.
இதே நேரத்தில் 'பங்காரா சன் ஆப் பங்காராட மனுஷ்யா' எனும் கன்னட படத்தில் நடித்து கன்னடத்தில் அறிமுகமானார். இடைவெளியின்றி பல விளம்பரங்களிலும் நடித்து வந்தார்.

அருள்நிதியின் 'இரவுக்கு ஆயிரம் கண்கள் ' படத்திலும் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்தார் வித்யா பிரதீப். அந்த நேரத்தில் சன் தொலைக்காட்சியில் நாயகி எனும் நெடுந்தொடரில் 'விஜயலஷ்மி' நடித்து கொண்டிருந்தார். அவருக்கு பிக்பாஸ் 2 ஆம் சீசனில் வாய்ப்பு கிடைக்க பாதியில் அந்த நெடுந்தொடரை விட்டு விலகிச்சென்றார். அவர் நடித்து வந்த கதாபாத்திரத்திற்கு வித்யா தேர்வானார் .

தற்போது வரை இரவு சன் தொலைக்காட்சியில் ஒளிப்பரபாகும் நாயகி தொடரில் நடித்து வருகிறார் வித்யா. .2018ல் களரி படத்தில் நாயகியாக அறிமுகமானார் வித்யா. ஆனால் அந்த படம் தோல்வி அடைய யாராலும் கவணிக்கபடாமல் போனது வித்யா பிரதீப்பின் நடிப்பு. அதன் பிறகு 'மாரி 2' படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்தார்.

2019ல் இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில் அருண் விஜயின் இரட்டை நடிப்பில் உருவான 'தடம்' படத்தில் மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருப்பார் வித்யா. அந்த படத்தின் வெற்றிக்கு பிறகு பலரின் பாராட்டும் அவருக்கு கிடைத்தது.


Click it and Unblock the Notifications











