சில்க் வேடத்தில் குளியல்... வித்யா பாலனுக்கு வந்த 'சோதனை'!

சில்க் ஸ்மிதா வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு ஏக்தா கபூர் தயாரிக்கும் தி டர்ட்டி பிக்சர் படத்தில், சில்க்காக நடித்து வருகிறார் வித்யா பாலன்.
சில்க் என்றால் குளியல் காட்சி இல்லாமலா.... இந்தப் படத்துக்காக ஒரு ஹாட் குளியல் காட்சியை மும்பை அருகே உள்ள குரேகான் பிலிம் சிட்டியில் படமாக்கினர்.
குளித்து முடித்து விட்டு வந்த வித்யாவுக்கு, அடுத்த சில நொடிகளில் உடம்பெல்லாம் ஒரே நமநம..!
ஆரம்பத்தில் அசட்டையாக இருந்த வித்யா, சில நிமிடங்கள் உடம்பு முழுக்க தோல் தடித்த மாதிரி உணர்வு ஏற்பட்டதால் பதறிப் போனார். தண்ணீர் சரியில்லாததால் அவருக்கு தோலில் இன்பெக்ஷன் வந்துவிட்டது தெரிந்து, உடனடியாக பக்கத்திலிருந்த மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.
அவரது உடம்புக்கு ஒப்புக்கொள்ளாத சோப் மற்றும் அதிக கெமிகல் கலந்த தண்ணீர்தான் இதற்குக் காரணம் என்று மருத்துவர்கள் கண்டுபிடித்து சிகிச்சையளித்துள்ளனர்.
இப்போது ரெஸ்டில் உள்ள வித்யா, அடுத்த சில தினங்களில் ஹைதராபாதில் நடக்கும் இதே பட ஷூட்டிங்கில், இதே போன்ற இன்னொரு குளியல் காட்சியில் பிகினியுடன் நடிக்கிறார்.
எதற்கு வம்பு என்று லாரி லாரியாக மினரல் வாட்டருக்கு ஆர்டர் கொடுத்துள்ளது படக்குழு!!


Click it and Unblock the Notifications











