’கர’ படத்தில் மமிதா பைஜு முதல் சாய்ஸே இல்லை.. அந்த நடிகை நோ சொல்லிட்டார்.. விக்னேஷ் ராஜா ஓபன்!

சென்னை: போர் தொழில் படத்தை இயக்கி அசோக் செல்வனுக்கு மிகப்பெரிய வெற்றியைக் கொடுத்தவர் தான் விக்னேஷ் ராஜா. தனுஷை வைத்து 'கர' படத்தை இயக்கியுள்ளார். நேற்று கோவையில் அதன் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி நடைபெற்றது.

ஏற்கனவே இந்த படத்தில் ஏன் மமிதா பைஜுவை நடிக்க வச்சீங்க என பலரும் கேள்வி எழுப்பி வரும் நிலையில், தற்போது இந்த படத்தில் முதலில் தன்னுடைய சாய்ஸ் இன்னொரு நடிகை என்பது குறித்து ஓபனாக விக்னேஷ் ராஜா போட்டு உடைத்துள்ளார்.

Vignesh Raja reveals Mamitha Baiju is not the first choice for Dhanush s Kara movie
Photo Credit:

கர படத்தின் டிரைலர் வெளியான பின்னரும் கூட மமிதா பைஜுவை நெட்டிசன்கள் ட்ரோல் செய்ய ஆரம்பித்த நிலையில், மமிதா பைஜு இந்த படத்தில் எப்படி வந்தார் என்கிற சுவாரஸ்யமான கதையையும் விக்னேஷ் ராஜா ஓபன் செய்துள்ளார்.

வரிசையாக மமிதா பைஜு படங்கள்: பிரேமலு திரைப்படம் மலையாளத்தில் 100 கோடி வசூல் ஈட்டியதும், கோலிவுட் இயக்குநர்களும் ஹீரோக்களும் வரிசையாக மமிதா பைஜுவின் கால்ஷீட்டை மொத்தமாக சில வருடங்களுக்கு வாங்கி விட்டனர் என்று தான் தோன்றுகிறது. ஜிவி பிரகாஷ் நடித்த ரிபெல் படத்தில் அறிமுகமானவர் தான் மமிதா பைஜு. அந்த படம் ஓடவில்லை. பிரதீப் ரங்கநாதன் உடன் நடித்த டியூட் திரைப்படம் 100 கோடி வசூல் ஈட்டியது. விஜய்யின் ஜன நாயகன், தனுஷின் கர, சூர்யாவுடன் விஸ்வநாத் அண்ட் சன்ஸ் மற்றும் விஷ்ணு விஷால் உடன் இரண்டு வானம் என வரிசையாக பல படங்கள் மமிதா பைஜு நடிப்பில் வெளியாக உள்ளது. ரசிகர்களுக்கு அவர் நடிப்பு போரடித்து விடாமல் இருந்தாலே நல்லது என்கின்றனர்.

Vignesh Raja reveals Mamitha Baiju is not the first choice for Dhanush s Kara movie
Photo Credit:

தனுஷ் ஜோடி: இட்லி கடை படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நித்யா மேனன் நடித்திருந்தார். அந்த படத்தைத் தொடர்ந்து தனுஷ் நடித்துள்ள கர படத்தில் அவருக்கு ஜோடியாக மமிதா பைஜு நடித்துள்ளார். வரும் ஏப்ரல் 30ம் தேதி கர படம் திரையரங்குகளில் வெளியாகிறது. கர படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி கோவையில் நேற்று கோலாகலமாக நடைபெற்றது.

சைத்ரா ரெட்டி: 3 பிஹெச்கே, மை லார்ட் படங்களில் நடித்த நடிகை சைத்ரா ரெட்டியை தான் முதலில் இந்த படத்துக்கு விக்னேஷ் ராஜா தேர்வு செய்தாராம். அவரை அணுகி படத்தின் கதை மற்றும் ஹீரோயின் கதாபாத்திரம் பற்றி சொல்லும் போது, இப்போ தான் மை லார்ட் படத்தில் இதே போன்ற வில்லேஜ் கெட்டப்பில் நடித்தேன் என சொல்லிவிட்டார். அதன் பின்னர் தான் மமிதா பைஜுவை அணுகினேன். ஆரம்பத்தில், அவர் சம்மதிக்க மாட்டார் என்றே நினைத்தேன். ஆனால், அவர் உடனடியாக ஓகே சொல்லி நடித்ததும் எனக்கு ரொம்பவே சர்ப்ரைஸ் ஆகிவிட்டது. தியேட்டரில் கண்டிப்பாக அவரது நடிப்பை பார்த்து அனைவரும் பாராட்டுவார்கள் என விக்னேஷ் ராஜா கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X