விக்னேஷ் சிவனின் பட்டப்பெயர் இதுதானா?… நயன்தாரா வெளியிட்ட சூப்பர் தகவல் !
சென்னை : நானும் ரெளடிதான் வெற்றியை தொடர்ந்து மீண்டும் விஜய் சேதுபதியை வைத்து காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தை இயக்குகிறார் விக்னேஷ் சிவன்.
செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் நிறுவனத்தின் லலித் குமார் மற்றும் விக்னேஷ் சிவன் இணைந்து இந்தப் படத்தைத் தயாரிக்கின்றனர்.
இப்படம் குறித்து சூப்பரான அப்டேட்டை வெளியிட்ட நயன்தாரா, அப்படியே தனது காதலர் விக்னேஷ் சிவனுக்கும் பட்டப்பெயர் வைத்துள்ளார்.

ஐயாவில் அறிமுகம்
ஐயா படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமான நயன்தாரா இன்று தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக உயர்ந்து நிற்கிறார்.சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், அஜித்குமார், விஜய், சூர்யா, விக்ரம், தனுஷ் போன்ற முன்னணி கதாநாயகர்களுடன் அனைத்து நடிகர்களுடனும் நடித்து விட்டார்.

சூப்பர் ஹீரோயின்
தனிப்பட்ட வாழ்க்கையில் பல இடர்பாடுகளை சந்தித்த நயன்தாரா, 2011 மற்றும் 2012 அந்த காலகட்டத்தில் இரண்டு தெலுங்கு சினிமாக்களில் மட்டுமே நடித்துக் கொண்டிருந்தார். அட்லியின் ராஜாராணி திரைப்படத்தில் நடித்து சிறந்த நடிகைக்கான மாநில அரசின் விருதினையும் பெற்றார். கதாநாயகர்களின் துணை இல்லாமலே சூப்பர் ஹிட் படத்தை வழங்கி தென்னிந்தியாவின் சூப்பர் ஹீரோயின் என்ற பெருமையையும் பெற்றார்.

காதல் மலர்ந்தது
நானும் ரவுடிதான் படத்தில் நடித்தபோது, அவருக்கும் டைரக்டர் விக்னேஷ் சிவனுக்கும் காதல் மலர்ந்தது. அவரது குடும்பத்தினருடனும் நெருக்கமானார். குடும்பமாக கோவிலுக்கும் சென்றுவந்தார்கள். இருவரும் அடிக்கடி வெளிநாடு களுக்கு சுற்றுலா சென்று வருகின்றனர். தனி விமானத்தில் கேரளா சென்று வருவதையும் வழக்கமாக வைத்துள்ளனர். இவர்கள் ஜோடியாக செல்லும் புகைப்படங்கள், சமூக வலை தளங்களில் அவ்வப்போது வைரலாகி வருகின்றன.

நிச்சயதார்த்தம்
சமீபத்தில் தனியார் டிவி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற நயன்தாரா முதன்முறையாக தனது காதலர் விக்னேஷ் சிவன் பற்றியும் பேசினார். தனது கையில் இருப்பது நிச்சயதார்த்த மோதிரம் தான் என்று கூறி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தினார்.

காத்துவாக்குல ரெண்டு காதல்
நயன்தாரா தற்போது காதலர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி சமந்தா நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது. இந்த படத்தின் முதல் சிங்கிள் பாடல் பிப்ரவரி 14ந் தேதி காதலர் தினத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது என்பதும் அனிருத் கம்போஸ் செய்த அந்த பாடல் ரசிகர்கள் மத்தியில் வைரலானது என்பதும் தெரிந்ததே

அன்பான டைரக்டர்
இந்நிலையில் இந்த படத்தின் இரண்டாவது சிங்கிள் பாடல் குறித்த தகவலை நயன்தாரா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில், படத்தின் இரண்டாவது சிங்கிள் பாடலான Two Two Two வரும் 18ம் தேதி வெளியாகும் என்று கூறியிருந்தார். மேலும் அவர் அந்த ட்விட்டில் விக்னேஷ் சிவனை அன்பான டைரக்டர் என குறிப்பிட்டுள்ளார். இது நயன்தாரா கொடுத்த புதுபட்டம் என கூறப்படுகிறது.

ரசிகர்களை கவரும்
அனிருத் இசையில் உருவாகியுள்ள இந்த பாடல் குறித்த கூடுதல் விவரங்கள் இன்னும் ஒரு சில நாட்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முதல் சிங்கிள் பாடலை போடவே இந்த படத்தின் இரண்டாவது சிங்கிள் பாடலும் ரசிகர்கள் மனதை கவரும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்


Click it and Unblock the Notifications











