நயன்தாராவை அலேக்காக தூக்கிய விக்னேஷ் சிவன்.. செம ஜாலிதான் போங்க.. ட்ரெண்டாகும் வீடியோ

சென்னை: விக்னேஷ் சிவனும், நயன்தாராவும் இரண்டு வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்துகொண்டனர். நேற்று அவர்களுக்கு இரண்டாவது ஆண்டு திருமண நாள் ஆகும். சில நாட்களுக்கு முன்பு வெளிநாட்டுக்கு இருவரும் தங்களது குழந்தைகளோடு டூர் சென்றிருந்தனர். அப்போது அவர்கள் எடுத்துக்கொண்ட வீடியோ சமூக வலைதளங்களில் ட்ரெண்டானது. இந்தச் சூழலில் அந்த டூரின்போது நயனை விக்னேஷ் சிவன் அலேக்காக தூக்கிய வீடியோ அதிகம் ஷேர் செய்யப்பட்டு வருகிறது.

லேடி சூப்பர் ஸ்டார் என்று ரசிகர்களால் அழைக்கப்படும் நயன்தாரா பல பிரச்னைகளை சந்தித்திருக்கிறார். அந்த பிரச்னைகளை கண்டு துவளாமல் ஃபீனிக்ஸ் பறவையாய் வீறுகொண்டு எழுந்தவர் அவர். ஒரு காதலுக்காக சினிமாவிலிருந்து ஒதுங்கிய அவர்; பிறகு மீண்டும் ரீ என்ட்ரி கொடுத்தார். அதன்படி தனது இரண்டாவது இன்னிங்ஸில் கவனத்துடன் கதைகளை தேர்ந்தெடுத்து; தான் வெறும் கிளாமர் ஹீரோயின் இல்லை நடிக்க தெரிந்த ஹீரோயின் என்று நிரூபித்தார்.

Nayanthara Vignesh Shivan

காதல்: இரண்டாவது இன்னிங்ஸில் அவர் நடித்த முக்கியமான படங்களில் ஒன்று நானும் ரௌடிதான். அந்தப் படம் அவருக்கு நல்ல பெயரை மட்டும் பெற்றுக்கொடுக்காமல் நல்ல காதலையும், காதலரையும் பெற்றுக்கொடுத்தது. அந்தப் படத்தில் நடித்தபோது அதன் இயக்குநர் விக்னேஷ் சிவனை காதலிக்க தொடங்கினார் நயன். அவருடன் விக்னேஷ் சிவன் இளையவர் என்றாலும்; காதலுக்கு வயது தேவை இல்லை மனது போதும் என்ற கோட்பாட்டின்படி இருவரும் காதலித்துக்கொண்டே லிவிங் டூ கெதர் வாழ்க்கையை வாழ்ந்தனர்.


திருமணம்: கிட்டத்தட்ட 5 வருடங்களுக்கும் மேலாக லிவிங்கில் வாழ்ந்த அவர்கள்; கடந்த 2022ஆம் ஆண்டு ஜூன் 9ஆம் தேதி மகாபலிபுரத்தில் பிரமாண்டமாக திருமணம் செய்துகொண்டனர். அதில் ரஜினிகாந்த், ஷாருக்கான், அஜித் மனைவி ஷாலினி, அட்லீ உள்ளிட்ட பல திரை பிரபலங்கள் கலந்துகொண்டனர். திருமணத்துக்கு பிறகும் தொடர்ந்து நடித்துவருகிறார் நயன்தாரா. அவரது நடிப்பில் கடைசியாக ஹிந்தியில் ஜவான், தமிழில் அன்னபூரணி ஆகிய படங்கள் வெளியாகின.

இரண்டு குழந்தைகள்: திருமணம் ஆன கையோடு வாடகை தாய் முறையில் குழந்தை பெற்றுக்கொண்டார் நயன். அவர்களுக்கு உயிர், உலக் என்ற இரண்டு மகன்கள் இருக்கிறார். நயன் எது செய்தாலும் சர்ச்சையாக்கப்படும் என்பதற்கேற்ப; இந்த வாடகை தாய் விவகாரமும் சர்ச்சையாக்கப்பட்டது. ஆனால் அரசு நடத்திய விசாரணையில், வாடகை தாய் விஷயத்தில் நயன்தாரா எந்த விதிமீறலும் செய்யவில்லை என்பது உறுதியானது.

ட்ரெண்டாகும் வீடியோ: நயன்தாராவுக்கு விக்னேஷும், விக்னேஷுக்கு நயன்தாராவும் உறுதுணையாக இருந்துவருகிறார்கள். இருவரும் பட வேலைகளில் பிஸியாக இருந்தாலும் வெளிநாட்டுக்கு குடும்பத்துடன் தவறாமல் டூர் சென்றுவருகிறார்கள். அந்தவகையில் அவர்கள் கடைசியாக ஹாங்காங் நாட்டுக்கு சென்றிருந்தார்கள். அங்கு எடுத்துக்கொண்ட வீடியோக்களும், புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகின.

இந்நிலையில் நேற்று அவர்கள் தங்களது இரண்டாவது ஆண்டு திருமண நாளை கொண்டாடினார்கள். அதனையொட்டி விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டிருக்கிறார். அதில் அவர் நயன்தாராவை அலேக்காக தூக்குகிறார். மேலும் அந்த வீடியோவோடு அவர், ’உன்னை திருமணம் செய்ததுதான் எனது வாழ்க்கையில் சிறந்த விஷயமே எனது உயிர், உலகம்’ என்று காதலோடு கேப்ஷனும் போட்டிருக்கிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X