சண்டைனு வந்துட்டா நயன்தாரா டெரர்தான்.. ஒருநாளுக்கு 30 லட்சம் வேண்டும்.. சீக்ரெட் சொன்ன விக்னேஷ் சிவன்
சென்னை: விக்னேஷ் சிவனும், நடிகை நயன்தாராவும் தீவிரமாக காதலித்து கடந்த 2022ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார்கள். வாடகை தாய் மூலம் 2 ஆண் குழந்தைகளை பெற்றார்கள். நயனும், விக்கியும் தங்களது கரியரில் பிஸியாக இருக்கிறார்கள். நயன் நடிப்பில் அடுத்ததாக டாக்சிக், மண்ணாங்கட்டி, ராக்காயி, சல்மான் கானுக்கு ஜோடியாக நடிக்கும் படங்கள் வரவிருக்கின்றன. விக்னேஷ் சிவன் இயக்கத்தில் கடந்த பத்தாம் தேதி எல்ஐகே திரைப்படம் வெளியாகி டீசன்ட்டான வரவேற்பை பெற்றது.
நானும் ரௌடிதான் படத்தில் பணியாற்றியபோது விக்னேஷ் சிவனும், நயன்தாராவும் காதலிக்க தொடங்கினார்கள். விக்கிக்கு அது இரண்டாவது படம். நயனோ லேடி சூப்பர் ஸ்டார் ரேஞ்சில் இருந்தார். அப்படிப்பட்ட இரண்டு பேருக்கும் காதல் என்று வந்த செய்தி ஒட்டுமொத்த திரைத்துறையிலும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. காதலிக்க தொடங்கிய அவர்கள் ஐந்து வருடங்களுக்கும் மேலாக லிவிங் ரிலேஷன்ஷிப்பில் இருந்தார்கள். பிறகு திருமணம் செய்யும் புரிதல் வந்ததையடுத்து கடந்த 2022ஆம் ஆண்டு மகாபலிபுரத்தில் வைத்து திருமணம் செய்துகொண்டார்கள்.

சூப்பர் ஜோடி: மேலும் திருமணம் முடிந்த கையோடு வாடகை தாய் மூலம் இரண்டு குழந்தைகளையும் பெற்று; மகன்களுக்கு உயிர், உலக் என வைத்தார்கள். இரண்டு பேரும் கோலிவுட்டில் ஃபேவரைட் ஜோடி என்ற பெயரை பெற்றிருக்கிறார்கள். நயனை திருமணம் செய்ததை வைத்து விக்னேஷ் சிவனை பலர் கிண்டலடித்தார்கள். அதையெல்லாம் அவர் காதில் போட்டுக்கொள்ளவில்லை. தனது கரியரிலும், திருமண வாழ்க்கையிலும் ஃபோகஸ் செய்த அவர்; சிறந்த கணவராக ஜொலித்துவருகிறார்.
இரண்டு பேருமே பிஸி: இரண்டு பேருமே பிஸியாகத்தான் இருக்கிறார்கள். விக்கி இயக்கத்தில் சமீபத்தில் எல்ஐகே திரைப்படம் வெளியானது. அதேபோல் நயனுக்கு டாக்சிக் உள்ளிட்ட ஏராளமான படங்கள் ரிலீஸுக்கு தயாராக இருக்கின்றன. இவை தவிர்த்து ஹிந்தியில் வம்சி இயக்கத்தில் சல்மான் கானுக்கு ஜோடியாகவும் நடிக்க நயன் கமிட்டாகியிருக்கிறார். இவை அனைத்துக்கும் விக்கி முழு சப்போர்ட்டாக இருந்துவருகிறார். இந்நிலையில் விக்னேஷ் சிவன் கொடுத்திருக்கும் பேட்டி சோஷியல் மீடியாவில் ட்ரெண்டாகியுள்ளது.
நயன்தாரா டெரர்தான்: சண்டை என்று வந்துவிட்டால் நயன்தாரா உண்மையான டெரர்தான். அவர் கோபப்படும்போது முழுக்க முழுக்க வேறு ஒரு மோடுக்கு சென்றுவிடுவார். அவருக்காக நான்தான் பல சமயங்களில் சமரசம் செய்துகொள்வேன். அதேபோல் நான் பாடல்கள் எழுதுவேன். எந்தப் பாடல் எழுதினாலும் முதலில் நயன்தாராவுக்கு அனுப்பி வைப்பேன். அவர் அதை படித்துவிட்டு இதயம் எமோஜி அனுப்பினால்தான் அதை இசையமைப்பாளர்களுக்கு அனுப்புவேன்" என்றார். மேலும் இன்னொரு பேட்டியில், "சீக்கிரமே செட்டில் ஆகிவிட வேண்டும். நான் நினைத்த பணம் சேர்ந்துவிட்டால் செட்டில் ஆகிவிடுவேன்.
எவ்வளவு வேண்டும்?: மொத்தம் 300லிருந்து 350 கோடி ரூபாய் வரை சேர்க்க வேண்டும். அதை அப்படியே ஃபிக்சட் டெபாசிட்டில் போடுவேன். அவர்கள் வருடத்துக்கு 21 கோடி கொடுப்பார்கள். மாதத்து ஒரு கோடியே 50 லட்சம் ரூபாய். ஒரு நாளைக்கு 30 லட்சம் ரூபாய். இவர்களுடன் அமந்து பேசுவதே எனக்கு அப்போது போதுமானதாக இருக்கும்" என்றார். இதை பார்த்த ரசிகர்களோ என்னது ஒரு நாளைக்கு 30 லட்சம் ரூபாய் செலவுக்கு இருந்தால்தான் செட்டில் ஆவாரா விக்னேஷ். அடேங்கப்பா ரொம்ப காஸ்ட்லியா இருக்கே என்று கமெண்ட்ஸ் செய்துவருகிறார்கள்.


Click it and Unblock the Notifications
