யப்பா வெங்கடாஜலபதி எல்ஐகேவ காப்பாத்தி விடு ப்பா.. நயன்தாராவுடன் தரிசனம் செய்த விக்னேஷ் சிவன்

சென்னை: விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன், க்ரித்தி ஷெட்டி, எஸ்.ஜே.சூர்யா, சீமான் உள்ளிட்டோர் நடித்திருக்கும் படம் எல்ஐகே. நீண்ட காலமாக ரிலீஸாகாமல் இருந்த அந்தப் படம் ஒருவழியாக நாளை ரிலீஸாகிறது. இதுவரை படத்துக்கான டிக்கெட் முன்பதிவுகள் எல்லாம் சூப்பராக நடந்திருப்பதாக தகவல்கள் வருகின்றன. இந்நிலையில் நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் திருப்பதி வெங்கடஜலாபதி கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார்கள்.

போடா போடி படத்தை இயக்கி இயக்குநராக அறிமுகமான விக்னேஷ் சிவன் இப்போது எல்ஐகே படத்தை இயக்கியிருக்கிறார். இதில் பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடித்திருக்கிறார். அவருக்கு ஜோடியாக க்ரித்தி ஷெட்டி நடித்துள்ளார். மேலும், சீமான், எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்டோரும் நடித்திருக்கிறார்கள். அனிருத் இசையமைத்திருக்கிறார். அஜித் பட வாய்ப்பு மிஸ் ஆன பிறகு விக்கி இயக்கியிருக்கும் படம் இது என்பதால் இதன் மீது உச்சக்கட்ட் எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எழுந்திருக்கிறது.

Vignesh Shivan Visits Tirupati Balaji Temple with Nayanthara Ahead of LIK Release
Photo Credit:

அவசியம் வெற்றி தேவை: விக்னேஷ் சிவன் எல்ஐகேவையும் சேர்த்து இதுவரை ஐந்து படங்களை இயக்கியிருக்கிறார். அவற்றில் நானும் ரௌடிதான் படம் மட்டும்தான் வெற்றி பெற்றது. போடா போடி திரைப்படம் சிறப்பாக இருந்தாலும் துப்பாக்கி படத்தோடு ரிலீஸ் ஆனதன் காரணமாக படுதோல்வியை சந்தித்தது. அதுகுறித்து சமீபத்தில் அளித்த ஒரு பேட்டியில்கூட விக்னேஷ் சிவன் காமெடியாக பேசியிருந்தார். ஆனாலும் அதற்குள் அவ்வளவு பெரிய வலி இருந்ததும் குறிப்பிடத்தக்கது. தொடர்ச்சியான தோல்வி காரணமாக எல்ஐகே படம் கண்டிப்பாக வெற்றி பெற வேண்டும் என்ற அவசியம் விக்கிக்கு ஏற்பட்டிருக்கிறது.

Also Read
யாருமே அதை பார்க்கவில்லை.. நான் அப்படி செய்வேனா?.. திரிஷா கொடுத்த சூப்பர் விளக்கம்
யாருமே அதை பார்க்கவில்லை.. நான் அப்படி செய்வேனா?.. திரிஷா கொடுத்த சூப்பர் விளக்கம்

படம் வெற்றி பெறுமா?: விக்னேஷ் சிவன் படங்களில் டார்க் ஹியூமர் கொஞ்சம் நன்றாகவே இருக்கும். மேலும் அவரது மேக்கிங்கும் வித்தியாசமானதாகவும் அதேசமயம் ரசிக்கும்படி இருக்கும். தன்னுடைய முழு பலத்தையும் இந்தப் படத்தில் அவர் காண்பித்திருப்பார் என்று நம்பலாம். காதல் ஜானர்தான் படம் என்றாலும் அதில் ஆப் உள்ளிட்ட விஷயங்களை வைத்து இந்த தலைமுறை ரசிகர்களுக்கு ஏற்றபடி கொடுத்திருப்பார் என்பது படத்தின் ட்ரெய்லரை பார்க்கையில் தெரிகிறது. அனி பங்குக்கு பாடல்களையும் சிறப்பாகவே கொடுத்திருக்கிறார். எனவே இப்படம் டீசன்ட்டான வெற்றி பெறும் என்ற நம்பிக்கை திரைத்துறையில் பரவலாகவே காணப்படுகிறது.

பிரதீப் ரங்கநாதன் ராசி: அதுமட்டுமின்றி பிரதீப் ரங்கநாதன் இதுவரை ஹீரோவாக நடித்த மூன்று படங்களுமே நூறு கோடி ரூபாய் வசூலை அள்ளியது. எனவே அந்த ராசியின் பலனாக எல்ஐகே படமும் மெகா ஹிட்டாகும் என்பது PR ரசிகர்களின் நிலைப்பாடு. அதுமட்டுமின்றி பிரதீப் தேர்ந்தெடுக்கும் கதைகளும் நல்லபடியாகவே இதுவரை இருக்கின்றன. எனவே இந்தப் படத்தின் கதையும் சூப்பராக இருக்கும் என்பதும் நம்பிக்கை. ஆகமொத்தம் அவசியமான வெற்றி விக்கிக்கு கிடைக்குமா இல்லையா என்பது நாளை இந்நேரம் தெரிந்துவிடும்.

திருப்பதியில் சாமி தரிசனம்: படம் நாளை ரிலீஸாகவிருப்பதால் விக்னேஷ் சிவன் அந்த வேலைகளில் பரபரப்பாக இருந்தார். சில நாட்களுக்கு முன்புதான் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவும் நடந்தது. இந்நிலையில் படம் நல்லபடியாக ரிலீஸாகி சூப்பர் ஹிட்டாக வேண்டுமென்று தனது மனைவி நயன்தாராவுடன் சேர்ந்து திருப்பதி வெங்கடாஜலபதி கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். அப்போது எடுக்கப்பட்ட வீடியோக்களும், புகைப்படங்களும் சோஷியல் மீடியாவில் ட்ரெண்டாகியுள்ளன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X