விஜய் 63 படத்தின் கதாநாயகி யார்? தீவிர யோசனையில் அட்லி
Recommended Video

சென்னை: விஜய் 63 திரைப்படத்தின் கதாநாயகி குறித்த முக்கிய தகவல் வெளியாகியுள்ளது.
சர்கார் திரைப்படத்திற்கு பிறகு விஜய் அட்லி இயக்கத்தில் நடிக்க உள்ளார். தெறி, மெர்சல் திரைப்படங்களுக்குப் பிறகு அட்லி விஜய் கூட்டணி என்பதால் எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது.

சர்கார் பட சர்ச்சை ஒருபக்கம் ஓடிக் கொண்டிருக்கும் நிலையில், விஜய் 63 திரைப்படத்திற்கான நடிகர்களைத் தேடும் பணியில் அட்லி ஈடுபட்டுள்ளார்.
இப்படத்தில் சமந்தா அல்லது நயன்தாரா நடிக்கலாம் என சொல்லப்படுகிறது. விஜய்யுடன் சமந்தா ஜோடி சேர்ந்த, கத்தி, தெறி மெர்சல் படங்கள் ஹிட் அடித்துள்ளன. நயன்தாராவுடன் விஜய் நடித்த வில்லு படத்தில் இருவருக்குமான கெமிஸ்ட்ரி நன்றாக இருந்தாலும், படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. அதனால் சென்டிமென்டாக சமந்தா தேர்வு செய்யப்படலாம் எனத் தெரிகிறது. அதே நேரத்தில் லேடி சூப்பர் ஸ்டாராக நயன்தாரா உயர்ந்திருப்பதால் அவரை நடிக்க வைத்தால் படத்திற்கு இன்னும் ப்ளஸ்ஸாக இருக்கும் எனவும் திட்டமிடுகின்றனராம். விரைவில் இது தொடர்பான அறிவிப்பு வெளியாக உள்ளது.
மெர்சல் திரைப்படம் ஹிட் அடித்துவிட்டதால் விஜய் 63 படத்தின் திரைக்கதை அதை விட ஸ்ட்ராங்காக இருக்கவேண்டுமென மெனக்கட்டு சிறப்பாக செதுக்கியிருக்கிறாராம் அட்லி. ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் தயாரிக்கும் இப்படத்திற்கு ஏஆர்.ரஹ்மான் இசையமைக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.


Click it and Unblock the Notifications











