கனகாவை விட மோசம்.. சாணக்கியா.. சாணக்கியான்னு சிம்பு கூட அப்படி டான்ஸ் போட்ட நடிகையா இவங்க?

சென்னை: சிம்புவுடன் தம் படத்தில் "சாணக்கியா சாணக்கியா"ன்னு கடலில் கவர்ச்சி பொங்க நடனமாடி இளைஞர்களை கிறங்கடித்த ரக்‌ஷிதாவா இவங்க என மீண்டும் அவரது புகைப்படங்களையும் வீடியோக்களையும் நெட்டிசன்கள் ஷேர் செய்து வைரலாக்கி வருகின்றனர். அதற்கு காரணம் சமீபத்தில் கன்னட நடிகர் தர்ஷனின் பிறந்தநாள் பார்ட்டியில் இவர் பங்கேற்றது தான் என்கின்றனர்.

சிம்புவுடன் தம் மற்றும் விஜய்யுடன் மதுர உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்தவர் தான் நடிகை ரக்‌ஷிதா. ஸ்வேதா எனும் பெயர் கொண்ட இவர் சினிமாவில் ரக்‌ஷிதா எனும் பெயரில் தமிழ், கன்னடம், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் ஹீரோயினாக நடித்துள்ளார்.

Rakshitha Dharshan Simbu

ரசிகரை கொடூரமாக கொலை செய்த வழக்கு காரணமாக சிறைக்குச் சென்று வந்த கன்னட நடிகர் தர்ஷனின் பிறந்தநாளில் ரக்‌ஷிதா பங்கேற்று அவருடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

சாணக்கியா சாணக்கியா ரக்‌ஷிதா: அந்த பேரை கேட்டதுமே ரசிகர்கள் ஃபயர் பட நடிகை நம்ம பிக் பாஸ் ரக்‌ஷிதா மகாலட்சுமியா என நினைத்து விட வேண்டாம். இவங்க நம்ம சிம்புவுடன் தம் படத்தில் நடித்த அந்த பழைய ஹீரோயின் ரக்‌ஷிதா தான். கன்னடத்தில் மறைந்த நடிகர் புனித் ராஜ்குமாரின் நடிப்பில் 2002ம் ஆண்டு வெளியான அப்பு படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். அதே ஆண்டு கிச்சா சுதீப் நடிப்பில் கன்னடத்தில் வெளியான தம் படத்தில் ஹீரோயினாக நடித்த இவரை தமிழில் அதே படத்தை ரீமேக் செய்து நடித்த சிம்பு ஹீரோயினையும் கோலிவுட்டில் அறிமுகப்படுத்தி "சாணக்கியா சாணக்கியா" பாடலுக்கு கவர்ச்சி டான்ஸ் போட வைத்திருந்தார்.

Rakshitha Dharshan Simbu

விஜய்யுடன் மதுர: தெலுங்கு மற்றும் கன்னடத்தில் செம பிசியாக படங்களில் நடித்துக் கொண்டிருந்த ரச்சிதாவுக்கு விஜய்யுடன் இணைந்து மதுர படத்தில் ஹீரோயினாக நடிக்கும் சான்ஸ் கிடைத்தது. சோனியா அகர்வால் பிளாஷ்பேக் போர்ஷனிலும் ரக்‌ஷிதா கரன்ட் போர்ஷனிலும் நடித்திருப்பார்கள். "இலந்தபழம் இலந்தபழம் உனக்குத்தான்" பாடலுக்கு அப்படி நடனமாடியவரா இப்போ இப்படி கனகாவை விட அடையாளமே தெரியாமல் ஆளே மாறிவிட்டார் என ரசிகர்கள் ஷாக் ஆகிவிட்டனர்.

Rakshitha Dharshan Simbu

எப்படி இருந்த நான் இப்படி ஆகிட்டேன்: பொதுவாக சினிமாவில் நடிப்பதை நிறுத்திவிட்டால் நடிகைகள் தங்களுடைய உடல் எடையை மெயின்டெயின் செய்வதெல்லாம் கிடையாது. 2007ம் ஆண்டு பிரேம் என்பவரை திருமணம் செய்துக் கொண்ட ரக்‌ஷிதா அதன்பிறகு நடிப்பதை நிறுத்திவிட்டார். இந்நிலையில், உடல் எடை அதிகரித்து ஆளே அடையாளம் தெரியாமல் மாறிவிட்டதாக கடந்த சில ஆண்டுகளாகவே இவரது புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

தர்ஷன் பர்த்டே பார்ட்டி: இந்நிலையில், மீண்டும் சோஷியல் மீடியாவில் இவர் வைரலாக காரணமே சமீபத்தில் நடைபெற்ற கன்னட நடிகர் டி பாஸ் என அழைக்கப்படும் தர்ஷனின் பிறந்தநாள் பார்ட்டியில் கலந்துக்கொண்டு அவருடன் எடுத்துக் கொண்ட போட்டோக்களை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட மீண்டும் சோஷியல் மீடியாவில் ரக்‌ஷிதா குறித்த ட்ரோல்கள் குவியத் தொடங்கியுள்ளன.

Rakshitha Dharshan Simbu

டிவியில் ஜட்ஜ்: வெள்ளித்திரையில் மார்க்கெட் இழக்கும் நடிகைகள் எல்லாம் சின்னத்திரைக்கு பார்சல் ஆவது போல சின்னத்திரைக்கு பல வருடங்களுக்கு முன்பாகவே என்ட்ரி கொடுத்த ரக்‌ஷிதா அங்கே நடக்கும் டான்ஸ் ஷோக்களுக்கு ஜட்ஜாக பங்கேற்று வருகிறார். கடைசியாக ஏக் லவ் யா எனும் கன்னட படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Rakshitha Dharshan Simbu

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X