என்னை விஜய் பாராட்டிட்டாரே: துள்ளிக் குதிக்கும் ப்ரியா பவானிசங்கர்
Recommended Video

சென்னை: விஜய் தனது நடிப்பை பாராட்டிய மகிழ்ச்சியில் உள்ளார் ப்ரியா பவானிசங்கர்.
கல்யாணம் முதல் காதல் வரை சீரியல் மூலம் ஏகப்பட்ட ரசிகர்களை பெற்றவர் ப்ரியா பவானி சங்கர். காதலரை திருமணம் செய்து கொண்டு ஆஸ்திரேலியாவில் செட்டில் ஆகப் போகிறேன் என்று கூறி சீரியலில் இருந்து வெளியேறினார்.
தயவு செய்து நடிப்பை தொடருங்கள் என்று ரசிகர்கள் கெஞ்சிய நிலையில் கோலிவுட்டில் ஹீரோயின் ஆகிவிட்டார்.

ப்ரியா
மேயாத மான் படம் மூலம் பெரிய திரைக்கு வந்த ப்ரியா கார்த்தியின் கடைக்குட்டி சிங்கம் படத்தில் நடித்து முடித்துள்ளார். தனக்கு பிடித்த கதாபாத்திரங்களாக தேர்வு செய்து நடித்து வருகிறார்.

விஜய்
ப்ரியாவின் நடிப்பை பார்த்து தளபதி விஜய் புகழ்ந்து பேசினாராம். இது குறித்த தகவல் சமூக வலைதளங்களில் தீயாக பரவியது. அது ப்ரியா பவானி சங்கரின் கண்ணில் பட அவரால் அவர் கண்களையே நம்ப முடியவில்லை.

மகிழ்ச்சி
விஜய் பாராட்டினால் யாருக்குத் தான் மகிழ்ச்சியாக இருக்காது. அப்படி இருக்கும்போது அந்த பாக்கியம் தனக்கு கிடைத்ததை நினைத்து ப்ரியா மகிழ்ச்சியில் உள்ளார்.
ட்வீட்
தன் நடிப்பை பாராட்டிய விஜய்க்கு நன்றி தெரிவித்து ட்வீட்டியுள்ளார் ப்ரியா பவானி சங்ர்.


Click it and Unblock the Notifications











