கீர்த்தி சுரேஷ் திருமணத்தில் மாப்பிள்ளை போல பட்டு வேட்டி, சட்டையில் விஜய்.. கோவாவில் கொண்டாட்டம்!
சென்னை: நடிகை கீர்த்தி சுரேஷ் திருமணம் இன்று கோவாவில் நடைபெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்நிலையில், நடிகர் விஜய் பட்டுச் சட்டை மற்றும் பட்டு வேட்டி அணிந்துக் கொண்டு திருமணத்தில் பங்கேற்க ரெடியான புகைப்படம் ஒன்று வெளியாகி இருக்கிறது. கீர்த்தி சுரேஷின் உறவினர்களுடன் விஜய் எடுத்துக் கொண்ட புகைப்படம் எனக் கூறுகின்றனர்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் நெற்றிக்கண் உள்ளிட்ட படங்களில் நடித்த நடிகை மேனகா சுரேஷின் மகள் தான் கீர்த்தி சுரேஷ். மலையாள படங்களில் நடித்து வந்த அவர் தமிழில் இது என்ன மாயம் படத்தின் மூலம் அறிமுகமானார்.

சிவகார்த்திகேயன் உடன் இணைந்து அவர் நடித்த ரஜினி முருகன் திரைப்படம் அவருக்கு மிகப்பெரிய வெற்றிப் படமாக மாறிய நிலையில், விஜய்யுடன் பைரவா, சர்க்கார் உள்ளிட்ட படங்களில் நடித்தார். மேலும், தமிழ் சினிமாவில் பல முன்னணி ஹீரோக்களுடன் நடித்து வந்த கீர்த்தி சுரேஷ் தனது காதலர் ஆண்டனி தட்டில் உடன் இன்று திருமணம் செய்துக் கொள்கிறார்.
கோவாவில் திருமணம்: நடிகை கீர்த்தி சுரேஷின் திருமணம் ரொம்பவே சீக்ரெட் திருமணமாக கோவாவில் நடைபெற்று வருகிறது. இதுவரை திருமண வரவேற்பு நிகழ்ச்சி, ஹல்தி, மெஹந்தி, சங்கீத் என எந்தவொரு புகைப்படமும் வெளியாகவில்லை. கீர்த்தி சுரேஷின் திருமண புகைப்படங்களும் இதுவரை வெளியாகவில்லை. இந்நிலையில், நடிகர் விஜய்யின் போட்டோ ஒன்று வெளியாகி இணையத்தில் தீயாக பரவி வருகிறது.
மாப்பிள்ளை போல விஜய்: நடிகர் விஜய்யுடன் பைரவா மற்றும் சர்க்கார் உள்ளிட்ட படங்களில் கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். விஜய்யின் நெருங்கிய நண்பர் சஞ்சீவ் வீட்டின் அருகே தான் கீர்த்தி சுரேஷ் சென்னையில் வசித்து வருகிறார். விஜய்யின் நெருங்கிய தோழியாக வலம் வரும் கீர்த்தி சுரேஷின் திருமணத்துக்காக விஜய் கோவா சென்ற நிலையில், அங்கே எடுத்துக் கொண்ட புகைப்படம் ஒன்று தற்போது வெளியாகி இருக்கிறது. பட்டு வேட்டி பட்டுச் சட்டையில் மாப்பிள்ளை போல செம மாஸாக போஸ் கொடுத்துள்ளார் தளபதி விஜய்.

கீர்த்தி சுரேஷ் திருமண புகைப்படங்கள்: நாக சைதன்யா - சோபிதா துலிபாலா திருமணம் சமீபத்தில் நடைபெற்று முடிந்தது. தென்னிந்தியாவின் அடுத்து மிகப்பெரிய திருமணமாக கீர்த்தி சுரேஷ் திருமணம் இன்று நடைபெற்று வருகிறது. கூடிய விரைவில் கீர்த்தி சுரேஷின் திருமண புகைப்படங்களும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தனது 15 வருட காதலரை கீர்த்தி சுரேஷ் கல்யாணம் பண்ண உள்ள நிலையில், சினிமா பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











