விஜய் கேமராவுக்கு முன்னால் ஒரு மாதிரியும், பின்னால் ஒரு மாதிரியும் இருப்பார்: சமந்தா
ஹைதராபாத்: விஜய் கேமராவுக்கு முன்னால் ஒரு மாதிரியும், பின்னால் வேறு மாதிரியும் இருப்பார் என நடிகை சமந்தா தெரிவித்துள்ளார்.
ஹைதராபாத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் நடிகை சமந்தா, தெலுங்கு திரை உலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான மகேஷ் பாபு ஆகியோர் கலந்து கொண்டனர். விஜய்யுடன் நடித்தது பற்றி கூறுமாறு மகேஷ் சமந்தாவிடம் கேட்டார்.

அதற்கு சமந்தா கூறுகையில்,
விஜய் படப்பிடிப்பு தளத்தில் அமைதியாக இருப்பார். இயக்குனர் மட்டும் அவரிடம் எதுவும் செய்யாமல் இருக்குமாறு கூறினால் 2 மணிநேரம் ஆனாலும் கூட அவர் யாருடனும் பேசாமல் அமைதியாக இருப்பார். ஆனால் கேமராவுக்கு முன்பு வந்துவிட்டால் நடிப்பில் அசத்துவார். அமைதியாக இருக்கும் இவரா கேமராவுக்கு முன்னால் இப்படி நடிக்கிறார் என்று வியப்பாக இருந்தது.
ஒரு வேளை அவருக்கு ஸ்பிளிட் பர்சனாலிட்டியோ என்று கூற நினைத்துள்ளேன். நகைச்சுவை, நடனம், சண்டை காட்சிகள் என்று எந்த காட்சியாக இருந்தாலும் அசத்துவார். அவர் கேமராவுக்கு முன்னால் ஒரு மாதரியும், பின்னால் வேறு மாதிரியும் இருப்பார் என்றார்.


Click it and Unblock the Notifications











