'அவர் அங்க, நான் இங்க..' எங்க ரெண்டு பேருக்கும் பதட்டம் இருந்தது.. பிரபல ஹீரோயின் சொல்றதை பாருங்க!
சென்னை: அந்தப் படத்தில் நடிக்கும் போது தனக்கும் ஹீரோவுக்கும் பதட்டம் இருந்ததாகத் தெரிவித்துள்ளார், அனன்யா பாண்டே.
தமிழில், நடிகையர் திலகம், நோட்டோ, டியர் காம்ரேட் ஆகிய படங்களில் நடித்தவர், தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டா.
அர்ஜூன் ரெட்டி படத்தின் மூலம் பிரபலமான இவர், கடைசியாக வேர்ல்ட் ஃபேமஸ் லவ்வர் என்ற படத்தில் நடித்திருந்தார்.

சம்பளத்தில் பாதி
இந்த படம் தமிழிலும் அதே பெயரில் டப் ஆகி ரிலீஸ் ஆனது. இதில் 4 ஹீரோயின்கள் நடித்திருந்தனர். இந்த படம் சரியாக ஓடவில்லை. அதற்கு விஜய் தேவரகொண்டா கதையில் தலையிட்டதுதான் காரணம் என்று கூறப்பட்டது. இதனால் அந்தப் படத்தின் தயாரிப்பாளர் அவரிடம் நஷ்ட ஈடுகேட்டிருந்தார். விஜய் தேவரகொண்டா, தனது சம்பளத்தில் பாதியை கொடுத்ததாக கூறப்பட்டது.

3 மொழிகளில்
விஜய் தேவரகொண்டா, இப்போது புரி ஜெகநாத் இயக்கும் படத்தில் நடிக்கிறார். இதற்கு ஃபைட்டர் என்று தற்காலிகமாக டைட்டில் வைத்துள்ளனர். இதை நடிகை சார்மியும் புரி ஜெகநாத்தும் இணைந்து தயாரிக்கின்றனர். இந்தப் படம் இந்தி, தெலுங்கு மற்றும் தமிழிலும் உருவாகிறது. இந்தியில் கரண் ஜோஹர், ஆபூர்வா மேத்தா தயாரிக்கின்றனர்.

சங்கி பாண்டே மகள்
இதில் அனன்யா பாண்டே ஹீரோயினாக நடிக்கிறார். இவர், இந்தி நடிகர் சங்கி பாண்டேவின் மகள். இந்தியில், ஸ்டூடன்ட் ஆப் த இயர் 2, 'பதி பத்னி அவுர் வோ' ஆகிய படங்களில் நடித்திருக்கிறார். விஜய் தேவரகொண்டா படத்தின் ஷூட்டிங் மும்பையில் தொடந்து 40 நாட்கள் நடந்தது. இதில் பாக்சராக விஜய் தேவரகொண்டா நடிப்பதாகக் கூறப்படுகிறது. ரம்யா கிருஷ்ணன் அவர் அம்மாவாக நடிக்கிறார்.

பதட்டமாக இருந்தது
இந்நிலையில் இந்தப் படத்தில் நடித்தபோது தனக்கும் விஜய் தேவரகொண்டாவுக்கும் பதட்டமாக இருந்தது என்று தெரிவிதுள்ளார், அனன்யா பாண்டே. இதுபற்றி அவர் கூறும்போது, 'இந்தப் படத்தின் மூலமாக நான் தென்னிந்திய சினிமாவுக்கு வருகிறேன். விஜய் தேவரகொண்டா இந்தி சினிமாவுக்கு வருகிறார். இருவரும் வெவ்வேறு பகுதியில் இருந்து வருவதால் கொஞ்சம் பதட்டம் இருந்தது.

எளிமையாக
விஜய், தென்னிந்திய சினிமாவில் பெரிய ஹீரோவாக இருக்கிறார். ஆனாலும் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல், எளிமையாகவும் தன்மையாகவும் நடந்து கொள்கிறார். மிகவும் அமைதியானவராகவும் மென்மையானவராகவும் இருக்கிறார்' என்று கூறியுள்ளார் அனன்யா. இந்த படத்தின் ஷூட்டிங்கின் போது, இருவரும் காதலித்து வருவதாகச் செய்திகள் வெளியாகி இருந்தன.


Click it and Unblock the Notifications











