திருமணத்துக்கு பின் புண்ணியம் சேர்க்கும் ராஷ்மிகா - விஜய் தேவரகொண்டா.. செய்திருப்பது பெரிய செயல்.. சூப்பர்
ஹைதராபாத்: ராஷ்மிகா மந்தனாவும், விஜய் தேவரகொண்டாவும் காதலித்து திருமணம் செய்துகொண்டார்கள். நாளை ஹைதராபாத்தில் இருக்கும் பிரபல நட்சத்திர ஹோட்டலில் பிரமாண்டமாக தங்களது ரிசப்ஷனை நடத்துகிறார்கள். அதில் ஏகப்பட்ட பிரபலங்கள் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சூழல் இப்படி இருக்க திருமணம் முடிந்த கையோடு இந்த ஜோடி செய்திருக்கும் செயல் ஒன்று அனைவரிடமும் பாராட்டை பெற்றிருக்கிறது.
நடிகை ராஷ்மிகா மந்தனாவும், நடிகர் விஜய் தேவரகொண்டாவும் கடந்த பிப்ரவரி 26ஆம் தேதி ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் திருமணம் செய்துகொண்டார்கள். மலைகளுக்கு நடுவே ரம்யமாக காட்சியளிக்கும் ஐடிசி மெமண்டோஸ் மாளிகையில் வைத்து தங்களது வாழ்க்கையில் முக்கியமான பகுதியில் பயணிக்க தொடங்கினார்கள். அத்திருமணத்தில் இரண்டு பேரின் குடும்பத்தினரும், உறவினர்களும், நெருங்கிய நண்பர்களும் மட்டுமே கலந்துகொண்டார்கள். ஒட்டுமொத்த பேரும் பரிபூரண மனதோடு தங்களது ஆசீர்வாதத்தை வழங்கினார்கள்.

உருகிய ராஷ்மிகா, விஜய் தேவரகொண்டா: திருமணம் பிரமாண்டமாக நடந்தது. ராஷ்மிகா கழுத்தில் தாலி ராஜா போல் குதிரையில் விஜய் தேவரகொண்டா வந்தது ரசிக்கும்படி இருந்தது. மொத்தம் மூன்று கிலோ தங்கத்தை ராஷ்மிகா தனது உடலில் நகைகளாக போட்டிருந்தாராம். விஜய்யும் அதற்கு குறைச்சல் தங்கத்திலேயே ஊறியிருந்தார் என்றுதான் சொல்ல வேண்டும். திருமணத்தை முடித்த பிறகு அவர்கள் தங்களது இன்ஸ்டாகிராம் போஸ்ட்டில் உருகி உருகி போஸ்ட் போட்டிருந்தார்கள். தனது நெருங்கிய தோழியையே தான் திருமணம் செய்திருப்பதாக தெரிவித்திருந்தார் தேவரகொண்டா.
ரிசப்ஷனில் பிரபலங்கள்: திருமணத்தை முடித்துவிட்டு ஹைதராபாத்தில் இருக்கும் ஸ்டார் ஹோட்டலில் நாளை ரிசப்ஷனை நடத்துகிறார்கள். இதில் ஏராளமான பிரபலங்கள் கலந்துகொள்வார்கள் என தெரிகிறது. பிரதமர் நரேந்திர மோடி, ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்ட பல முக்கிய தலைக்கட்டுக்களுக்கு பத்திரிகைகள் சென்றிருக்கின்றன. இந்தியாவின் நம்பர் ஒன் பணக்காரரான முகேஷ் அம்பானி திருமணத்திலேயே கலந்துகொள்வார் என தகவல்கள் வெளியாகின. ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை. எனவே கண்டிப்பாக ரிசப்ஷனில் பங்கேற்பார் என கூறப்படுகிறது.
விஜய் தேவரகொண்டா செய்த செயல்: இப்படி திருமண வேலைகள் முடிந்து அடுத்து ரிசப்ஷன் வேலையில் மும்முரமாகிவிட்டது ஜோடி. இடை இடையே உற்றார், உறவினர்கள் அழைக்கு விருந்திலும் பிஸியாக கலந்துகொள்கிறார்கள். இப்படி எக்கச்சக்க பிஸியாக இருந்தாலும் திருமணம் முடித்த கையோடு நல்ல காரியம் ஒன்றை செய்திருக்கிறார்கள் இந்த ஜோடி. அதாவது, விஜய் தேவரகொண்டா தனது சொந்த ஊரான தும்மன்பேட்டுக்கு தன் மனைவி ராஷ்மிகா மந்தனாவுடன் விருந்துக்கு சென்றிருந்தார்.
சென்ற இடத்தில் அப்பகுதியில் இருக்கும் அரசு பள்ளியில் படிக்கும் ஒன்பதாம் மற்றும் பத்தாம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படும் என தெரிவித்திருக்கிறார். முன்னதாக, இந்தியா முழுவதும் பல கோயில்களில் இந்த ஜோடி தங்கள் திருமணத்தை முன்னிட்டு அன்னதானம் வழங்கினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. திருமணம் முடிந்த கையோடு ஹனிமூன் செல்லும் ஜோடிகளுக்கு மத்தியில் இவர்கள் ஏகப்பட்ட நல்ல காரியங்களை செய்துவருவது அனைவரிடமும் பாராட்டை பெற்றுவருகிறது.


Click it and Unblock the Notifications















