கல்யாணம் முடிந்த கையோடு ராஷ்மிகா பங்கேற்ற சுபநிகழ்ச்சி.. அல்லு சிரிஷுக்கு நடந்த பெல்லி கொடுக்கு விழா!
ஹைதராபாத்: நடிகை ராஷ்மிகா மந்தனாவுக்கும் விஜய் தேவரகொண்டாவுக்கும் உதய்பூரில் கடந்த பிப்ரவரி 26ம் தேதி திருமணம் நடைபெற்றது. அதன் பின்னர் மும்பையில் இருந்து கிளம்பி ஹைதராபாத்துக்கு விஜய் தேவரகொண்டா வீட்டுக்கு ராஷ்மிகா வந்துவிட்டார்.
வரும் மார்ச் 4ம் தேதி ஹைதராபாத்தில் உள்ள தெலுங்கு பிரபலங்களுக்காக பிரம்மாண்ட வரவேற்பு நிகழ்ச்சியை இருவரும் நடத்தவுள்ளனர். அதற்கான ஏற்பாடுகள் ஒருபக்கம் நடைபெற்று வர அல்லு சிரிஷின் ’பெல்லி கொடுக்கு’ (நலங்கு) கொண்டாட்டத்தில் இருவரும் பங்கேற்ற வீடியோக்களும் போட்டோக்களும் வெளியாகி உள்ளன.

ராஷ்மிகா மந்தனாவின் திருமண புகைப்படங்கள் மட்டுமே வெளியானது. ஹல்தி, சங்கீத் கொண்டாட்ட போட்டோக்கள் மற்றும் வீடியோக்கள் எல்லாம் வெளியாகவில்லை. இந்நிலையில், அல்லு அர்ஜுன் தம்பி பெல்லி கொடுக்கு கொண்டாட்ட வீடியோ வைரலாகி வருகிறது.
அல்லு அர்ஜுன் தம்பி திருமணம்: கடந்த வாரம் விஜய் தேவரகொண்டா - ராஷ்மிகா திருமணம் களைகட்டியது. அதன் பின்னர் நடிகர் விஜய் - சங்கீதா விவாகரத்து தகவல்கள் கசிந்து ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியது. இந்நிலையில், இந்த வாரம் மார்ச் 6ம் தேதி அல்லு அர்ஜுன் தம்பி அல்லு சிரிஷின் திருமணம் ஹைதராபாத்தில் பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளது. அதன் பெல்லி கொடுக்கு கொண்டாட்டம் நேற்று களைகட்டிய நிலையில், வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் வெளியாகி உள்ளன.
ராஷ்மிகா - விஜய் தேவரகொண்டா பங்கேற்பு: திருமணம் முடிந்து தங்களுடைய வரவேற்பு நிகழ்ச்சியின் ஏற்பாடுகளில் மட்டும் பிசியாக இல்லாமல் அல்லு சிரிஷ் திருமணத்தை முன்னிட்டு நடைபெற்ற பெல்லி கொடுக்கு கொண்டாட்டத்தில் புஷ்பா நடிகை ராஷ்மிகா மந்தனா தனது கணவர் விஜய் தேவரகொண்டாவுடன் பங்கேற்ற காட்சிகளை அல்லு சிரிஷ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
ராம்சரணும் ஆஜர்: டோலிவுட்டின் முன்னணி நடிகரும் அல்லு அர்ஜுனின் உறவினருமான ராம் சரணும் பெல்லி கொடுக்கு விழாவில் பங்கேற்றார். ஒட்டுமொத்த பிரபலங்களும் வரும் 4ம் தேதி ராஷ்மிகா - விஜய் தேவரகொண்டா திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், மார்ச் 6ம் தேதி நடைபெறவுள்ள நடிகர் அல்லு சிரிஷ் மற்றும் அவரது காதலி நைனிகா ரெட்டி திருமணத்திலும் பங்கேற்று மணமக்களை வாழ்த்தவுள்ளனர்.


Click it and Unblock the Notifications











