Rashmika Sangeet: ராஷ்மிகாவை பிடித்து விஜய் தேவரகொண்டா எப்படி சுத்துறாரு பாருங்க.. செம வீடியோ!
ஹைதராபாத்: விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகாவின் திருமணத்தை முன்னிட்டு உதய்பூரில் பிரம்மாண்டமாக நடைபெற்ற சங்கீத் நிகழ்ச்சியின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை நடிகை ராஷ்மிகா மந்தனா மற்றும் விஜய் தேவரகொண்டா இருவரும் கூட்டாக தங்களது இன்ஸ்டாகிராம் பக்கங்களில் வெளியிட்டுள்ளனர்.
விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனாவின் திருமண வரவேற்பு விழா நாளை ஹைதராபாத்தில் நடைபெறுகிறது. கடந்த பிப்ரவரி 26ம் தேதி இருவரும் உதய்பூரில் உள்ள சொகுசு ஹோட்டலில் திருமணம் செய்துக் கொண்டனர்.

இந்நிலையில், திருமணத்துக்கு முன்பாக பிப்ரவரி 24ம் தேதி நடைபெற்ற சங்கீத் நிகழ்ச்சியின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை ஷேர் செய்து வைரலாக்கி உள்ளனர்.
மெகா திருமணம்: பாலிவுட் பிரபலங்களே வியக்கும் அளவுக்கு ராஷ்மிகா மந்தனா - விஜய் தேவரகொண்டா திருமணம் உதய்பூரில் நடைபெற்றது. சுமார் 3 கிலோ தங்க நகைகளை இருவரும் அணிந்திருந்ததாக ஏகப்பட்ட தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்து முறைப்படி ராஷ்மிகா மற்றும் விஜய் தேவரகொண்டா திருமணம் நடைபெற்றது. மேலும், கர்நாடகா பாரம்பரிய முறையில் உணவு மெனுவெல்லாம் இருந்ததாக தகவல்கள் வெளியாகின. ராஷ்மிகாவின் சங்கீத் நிகழ்ச்சியில் பல பாலிவுட் பிரபலங்கள் மற்றும் நடிகை கல்யாணி பிரியதர்ஷன் உள்ளிட்ட பிரபலங்கள் பங்கேற்றதாக கூறப்படுகிறது.

சக்கைப்போடு போட்ட சங்கீத்: திருமணத்துக்கு முன்பாக நடைபெறும் ஹல்தி, மெஹந்தி, சங்கீத் உள்ளிட்ட நிகழ்வுகளையும் சமீப காலமாக சினிமா பிரபலங்கள் மற்றும் தொழிலதிபர்கள் பிரம்மாண்டமாக நடத்தி வருகின்றனர். கடந்த மாதம் பிப்ரவரி 24ம் தேதி உதய்பூரில் நடைபெற்ற சங்கீத் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியான நிலையில், ராஷ்மிகா மந்தனாவும் விஜய் தேவரகொண்டாவும் நிகழ்ச்சியில் டான்ஸ் ஆடிய வீடியோக்கள் வெளியாகி உள்ளன.
ராஷ்மிகாவை தூக்கி சுற்றும் விஜய்: நேஷ்னல் கிரஷ் ராஷ்மிகா மந்தனாவை நடிகர் விஜய் தேவரகொண்டா சங்கீத் நிகழ்ச்சியில் தூக்கி சுற்றும் காட்சிகள் வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளன. கருநீல உடையில் விஜய் தேவரகொண்டா ராஜா போலவே காட்சியளிக்க ராஷ்மிகா மந்தனா பிரின்சஸ் போல உடையணிந்து நடனமாடிய காட்சிகள் ரசிகர்களின் லைக்குகளை ஒட்டுமொத்தமாக அள்ளி வருகிறது. திருமண புகைப்படங்களை தொடர்ந்து இதுவும் சோஷியல் மீடியாவில் ரெக்கார்டு வைக்கும் என்பதில் எந்தவொரு சந்தேகமும் இல்லை.


Click it and Unblock the Notifications











