Rashmika: ராஷ்மிகா விஜய் தேவரகொண்டா வயது வித்தியாசம்.. அட இதை கவனிச்சீங்களா? புரளியைக் கிளப்பாதீங்க

ஹைதராபாத்: நடிகை ராஷ்மிகா மந்தனாவுக்கு நடிகர் விஜய் தேவரகொண்டாவுக்கும் வரும் 26ஆம் தேதி திருமணம் நடைபெற உள்ளது என ஏற்கனவே தகவல்கள் வெளியானது. அதை உறுதிப்படுத்தும் விதமாக அவர்களின் திருமண பத்திரிகை தொடர்பான புகைப்படங்களும் இணையத்தில் வேகமாக பரவியது. இப்படி இருக்கையில் இணையத்தில் இவர்கள் இருவருக்கும் இடையிலான ரொமான்ஸ், கெமிஸ்ட்ரி, லவ் என மிகவும் சுவாரஸ்யமான தகவல்கள் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

இப்படி இருக்கையில் சில இணையவாசிகள் இவர்களின் வயது வித்தியாசம் குறித்து எல்லாம் கேள்வி எழுப்பி வருகிறார்கள். அதாவது இருவருக்கும் மிகவும் அதிக வயது வித்தியாசம் உள்ளது. இப்படி இருக்கும் போது இவர்கள் திருமண வாழ்க்கை எந்த அளவுக்கு ஸ்மூத்தாக இருக்கும் என்பது கேள்விக்குறிதான் என்று நெகடிவாகவே கமெண்ட் போட்டு வருகிறார்கள்.

Vijay Deverakonda and Rashmika Mandanna to Wed on Feb 26 Age Gap Controversy Sparks Online Debate

இப்படி நெகடிவான விஷயங்களை பகிரும் சிலருக்கு விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனாவின் ரசிகர்கள் பதிலடி கொடுக்காமல் இல்லை. மேலும் பலர் அவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டு நிம்மதியாகவும் மகிழ்ச்சியாகவும் வாழ வேண்டும் என கடவுளை எல்லாம் வேண்டி வருகிறார்கள். இப்படி இருக்கும் போது, அவர்களின் வயது வித்தியாசம் குறித்து பார்க்கலாம்.

வயது வித்தியாசம்: விஜய் தேவரகொண்டா கடந்த 1989 ஆம் ஆண்டு மே மாதம் 9ஆம் தேதி பிறந்தார். இவருக்கு வயது 36. அதேபோல் நடிகை ராஷ்மிகா மந்தனா கடந்த 1996 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 5ஆம் தேதி பிறந்துள்ளார். இவருக்கு வயது 29. இவர்கள் இருவருக்கும் இடையில் இருக்கும் வயது வித்தியாசம் என்றால் 7 ஆண்டுகள். 7 ஆண்டுகள் என்பது சமகாலத்தில் பெண்கள் திருமணம் செய்ய பெருமளவு தயக்கம் காட்டுகிற வயது வித்தியாசம். அதேபோல் பலருமே இவ்வளவு வயது வித்தியாசம் என்பது இல்லற வாழ்க்கையில் சில பிரச்னைகளை கொண்டு வர அதிக வாய்ப்புகள் உள்ளது என்று எல்லாம் கூறுகிறார்கள். ஆனால் திரை உலகத்தில் இந்த வயது வித்தியாசம் என்பது வழக்கமான ஒன்றாக இருக்கிறது.

Vijay Deverakonda and Rashmika Mandanna to Wed on Feb 26 Age Gap Controversy Sparks Online Debate

90ஸ் கிட்ஸ் வாழ்த்து: மேலும் இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்வதால், காதலுக்கு வயது வித்தியாசங்கள் ஏது என்று போஸ்ட் போடும் ரசிகர்களும் இருக்கிறார்கள். இவர்கள் இருவருமே அக்மார்க் 90ஸ் கிட்ஸ் என்பதால் இவர்களின் திருமணம் 90ஸ் கிட்ஸ்கள் சிலருக்கு பெரும் மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. திருமணம் வரும் வியாழக்கிழமை நடைபெறவுள்ளது. அதேபோல் திருமண வரவேற்பு மார்ச் மாதம் 4 ஆம் தேதி ஹைதராபாத்தில் நடைபெறவுள்ளது. அதற்கான ஏற்பாடுகளும் வெகு சிறப்பாக நடைபெற்று வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X