நயன்தாராவிற்கு ஓரவஞ்சனை.. விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா திருமண ரைட்ஸ்.. 60 கோடிக்கு கேட்ட நெட்பிளிக்ஸ்?
சென்னை: விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா மந்தனாவிற்கு வரும் 26 ஆம் தேதி ராஜஸ்தானில் உள்ள உதய்பூர் கோட்டையில் தடபுடலாக திருமணம் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கும் நிலையில், இவர்களின் திருமண உரிமையை நெட்ஃபிளிக்ஸ் பல கோடிக்கு வாங்க முன் வந்துள்ளதாக கூறப்படுகிறது.
நடிகர் விஜய் தேவரகொண்டாவும், ராஷ்மிகா மந்தனாவும் கீதா கோவிந்தம் படத்தில் ஒன்றாக சேர்ந்து நடித்தனர். இந்த படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. அந்த படத்தை தொடர்ந்து, மீண்டும் இருவரும் சேர்ந்து 'டியர் காம்ரேட்' படத்தில் சேர்ந்து நடித்தார். அந்த படமும் வெற்றி பெற்றது. மேலும் படத்தில் இவர்கள் இருவரின் கேமிஸ்ட்ரியை ரசிகர்கள் வெகுவாக ரசித்தார்கள். இதன்பின் இருவரும் காதலித்து வருவதாக பல செய்திகள் வெளிவந்தன.

கோலாகலமாக திருமணம்: ரசிகர்கள் அனைவரும் இவர்களின் திருமண செய்தியை எப்போது வெளியிடுவார்கள் என காத்திருந்த நிலையில், விஜய் தேவரகொண்டாவுக்கும், நடிகை ராஷ்மிகா மந்தனாவுக்கும் வரும் பிப்ரவரி 26ஆம் தேதி ராஜஸ்தானில் உள்ள உதய்பூர் கோட்டையில் திருமணம் நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த திருமணம் மிகவும் தனிப்பட்ட முறையில், இரு குடும்பத்தினர் மற்றும் மிக நெருங்கிய நண்பர்கள் மட்டுமே கலந்து கொள்ளும் வகையில் நடைபெறும் எனக் கூறப்படுகிறது.
ஆவணப்படம்: திருமண நிகழ்வை ஆவணப்படமாக படமாக்கி நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியிட இரு நடிகர்களும் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த ஆவணப்படத்திற்கு நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம் ரூ.60 கோடி வழங்க முன்வந்துள்ளது. இந்த திருமணம் இந்திய சினிமா வரலாற்றில் மிகவும் விலை உயர்ந்த ஆவணப்பட ஒப்பந்தங்களில் ஒன்றாக இருக்கலாம் என சொல்லப்பட்ட து. ஆனால், விஜய்தேவரகொண்டா இதை மறுத்துள்ளார். திருமண நினைவுகள் விலைமதிப்பற்றவை என்பதால் அவற்றை ரகசியமாக வைத்திருக்க விரும்புவதாகக் கூறி உள்ளார். நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம் பல கட்ட பேச்சுவார்த்தை நடத்தியும் அவர் மறுவிட்டதாக கூறப்படுகிறது. முன்னதாக, நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் நயன்தாரா, விக்னேஷ் சிவன் திருமண உரிமையை ரூ25 கோடிக்கு வாங்கியது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











