கூட்டத்தில் திடீரென ராஷ்மிகாவுக்கு முத்தம் கொடுத்த விஜய் தேவரகொண்டா.. பூனைக்குட்டி வெளியே வந்துடுச்சு!
ஹைதராபாத்: தி கேர்ள் ஃபிரெண்ட் திரைப்படத்தின் வெற்றி விழாவில் ராஷ்மிகா மந்தனாவுக்கு விஜய் தேவரகொண்டா முத்தம் கொடுத்த வீடியோ வைரலாகி வருகிறது. விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா, பல ஆண்டுகளாக ரகசியமாக வைத்திருந்த தங்கள் காதலை இப்போது வெளிப்படையாகப் பேசத் தொடங்கியுள்ள நிலையில், கூடிய விரைவில் திருமணமும் நடக்கப்போவதாக பேச்சுக்கள் அடிபடத் தொடங்கிவிட்டன.
ராஷ்மிகா மந்தனா நடிப்பில் வெளிவந்த "தி கேர்ள்ஃபிரண்ட்" திரைப்படத்தின் வெற்றி விழாவில் விஜய் தேவரகொண்டா கலந்துகொண்டது ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை அளித்தது. தனது தனிப்பட்ட வாழ்க்கையை பொதுவெளியில் இருந்து விலக்கி வைப்பதில் விஜய் தேவரகொண்டா பெயர் பெற்றவர்.

இந்த விழாவில், விஜய் தேவரகொண்டா ராஷ்மிகாவின் கையைப் பிடித்து முத்தமிட்டபோது, ரசிகர்கள் உற்சாக ஆரவாரம் செய்தனர். இது அவர்கள் இருவரும் பகிரங்கமாக காதலை வெளிப்படுத்திய முதல் தருணம். ராஷ்மிகா வெட்கத்துடன் புன்னகைக்க, விஜய் காதலுடன் அவரைப் பார்த்த இந்த நிகழ்வு சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
ராஷ்மிகாவுக்கு முத்தம்: என்னதான் அனிமல் படத்தில் ரன்பீர் கபூர் ராஷ்மிகாவுக்கு லிப் லாக் அடித்தாலும், நிஜ வாழ்க்கையில், "விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா மந்தனாவின் கையை முத்தமிட்டது - இன்றைய இணையத்தின் கியூட்டஸ்ட் தருணம்!" என்ற தலைப்பில் நெட்டிசன்கள் பலரும் பதிவிட்டு வருகின்றனர். மேலும், ராஷி உன்னை பார்த்தால் ரொம்ப பெருமையாக இருக்கிறது. மற்றவர்களுக்கு உறுதுணையாக இருக்கும் ஒரு படத்தை கொடுத்திருக்க என மேடையில் கொஞ்சிக் கொண்டே பாராட்டுப் பத்திரமும் வாசித்துள்ளார்.
வெற்றி விழா: தொடர்ந்து விஜய் தேவரகொண்டா நடிக்கும் படங்கள் ஃப்ளாப் ஆகி வந்தாலும், அவரது காதலியான ராஷ்மிகா நடிக்கும் படங்கள் எல்லாம் பாலிவுட் முதல் டோலிவுட் வரை வெற்றிவாகை சூடி வருகிறது. "தி கேர்ள்ஃபிரண்ட்" படம் 10 கோடிக்கும் அதிகமான வசூலை ஈட்டிய நிலையில், அதன் வெற்றி விழா நேற்று ஹைதராபாத்தில் நடைபெற்ற நிலையில், அதில், சிறப்பு விருந்தினராக ராஷ்மிகாவின் பாய் ஃபிரெண்டான விஜய் தேவரகொண்டா கலந்துக் கொண்டு படக்குழுவையும் தனது காதலியையும் பாராட்டி முத்தமிட்டது ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.
ராஷ்மிகாவின் விருப்பம்: முன்னதாக தனக்கு எப்படிப்பட்ட மாப்பிள்ளை கிடைக்க வேண்டும் என ராஷ்மிகா சமீபத்தில் நடைபெற்ற விழாவில், "என்னுடைய விருப்பம் என்னவென்றால், வாழ்க்கையை ஆழமாகப் புரிந்துகொள்ளக்கூடிய ஒருவர் வேண்டும். அவர் தனது சொந்தப் பார்வையில் சூழ்நிலைகளை எப்படிப் பார்க்கிறார் என்பது முக்கியம். புரிந்துகொள்ளும் மனம் கொண்டவராகவும், உண்மையான நல்லவராகவும், என்னுடன் சேர்ந்து போராடக்கூடியவராகவும் இருக்க வேண்டும்."
"நாளை எனக்கு ஒரு பிரச்சனை என்றால், அந்த நபர் என்னுடன் போராடுவார் என்று எனக்குத் தெரியும். அதேபோல் நான் அவருக்காக எதையும் செய்வேன். என் துணையாக இருக்க வேண்டியவர் இப்படிப்பட்டவராகத்தான் இருக்க வேண்டும்" என்று ராஷ்மிகா விளக்கினார்.
திருமணம் செய்வேன்: நிகழ்ச்சியின் ஒரு சுவாரஸ்யமான பகுதியில், ராஷ்மிகா "டேட், மேரி, கில்" விளையாட்டில் பங்கேற்றார். அப்போது, ஒரு அனிமேஷன் கதாபாத்திரத்துடன் டேட்டிங் செய்வேன் என்றும், விஜய் தேவரகொண்டாவை திருமணம் செய்வேன் என்றும் தயக்கமின்றி அறிவித்தார். இது ரசிகர்களிடையே பெரும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது.
ரகசிய நிச்சயதார்த்தம்: விஜய் மற்றும் ராஷ்மிகா இருவரும் 2025 ஆம் ஆண்டு அக்டோபர் 3 ஆம் தேதி நெருங்கிய நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் முன்னிலையில் ரகசியமாக நிச்சயதார்த்தம் செய்துகொண்டதாக NDTV செய்தி வெளியிட்டுள்ளது.
மேலும், நெருங்கிய வட்டார தகவலின்படி, அவர்களின் திருமண ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. இந்த ஜோடி 2026 ஆம் ஆண்டு பிப்ரவரி 26 ஆம் தேதி ஒரு ஆடம்பரமான ஆனால் நெருக்கமான திருமண விழாவை நடத்த திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











