ராஷ்மிகா - விஜய் தேவரகொண்டா திருமண பத்திரிகை பெட்டி.. உள்ளே என்ன இருக்கு தெரியுமா?.. அசத்துறாங்களே
சென்னை: ராஷ்மிகா மந்தனாவுக்கும், விஜய் தேவரகொண்டாவுக்கும் இன்னும் ஒரு வாரத்தில் (பிப்ரவரி 26ஆம் தேதி) திருமணம் உதய்பூரில் நடக்கவிருக்கிறது. அதற்கான ஏற்பாடுகள் மணமக்கள் வீட்டில் கோலாகலமாக தொடங்கியிருக்கின்றன. முகேஷ் அம்பானி முதல் பல பிரபலங்கள் இந்தத் திருமணத்தில் கலந்துகொள்ளவிருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அவர்கள் திருமண பத்திரிகை பெட்டியில் என்னென்ன பொருட்கள் இருக்கின்றன என்பது குறித்து தெரியவந்திருக்கிறது.
கன்னட திரையுலகத்தில் தனது திரை பயணத்தை ஆரம்பித்தார் ராஷ்மிகா மந்தனா. க்ரிக் பார்ட்டி படத்தில் தனக்கு ஜோடியாக நடித்த ரக்ஷித் ஷெட்டியை காதலித்தார். இரண்டு பேருக்கும் நிச்சயதார்த்தமும் நடந்தது. ஆனால் அதற்கு பிறகு அவர்களது ரிலேஷன்ஷிப் அடுத்தக்கட்டத்துக்கு நகரவில்லை. அவரிடமிருந்து விலகிய ராஷ்மிகா சினிமாவில் முழு கவனத்தையும் செலுத்தி முன்னணி நடிகையாக மாறினார். இப்போது அவர் பான் இந்தியா ஹீரோயினாக ஜொலித்துக்கொண்டிருக்கிறார்.
காதலில் விழுந்த ராஷ்மிகா: இதற்கிடயே விஜய் தேவரகொண்டாவுடன் படங்களில் சேர்ந்து நடித்தபோது இரண்டு பேருக்கும் காதல் வந்தது. தங்களது ரிலேஷன்ஷிப் குறித்து வெளியே எதுவும் சொல்லாமல் ரகசியம் காத்து வந்தார்கள். ஆனால் கொஞ்சம் கொஞ்சமாக அவர்களது காதல் விவகாரம் எப்படியோ ரசிகர்களுக்கு தெரிந்துவிட்டது. மேலும் கடந்த வருடத்தில் இரண்டு பேருக்கும் ஹைதராபாத்தில் வைத்து சிம்ப்பிளாக நிச்சயதார்த்தமும் நடந்து முடிந்தது.

26ஆம் தேதி திருமணம்: நிச்சயதார்த்தம் முடிந்த சூழலில் வரும் 26ஆம் தேதி உதய்பூரில் வைத்து அவர்கள் திருமணம் செய்துகொள்ளவிருக்கிறார்கள். இந்த திருமணத்தில் முகேஷ் அம்பானி, அல்லு அர்ஜுன், சந்தீப் ரெட்டி வங்கா உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்துகொள்கிறார்கள். மார்ச் நான்காம் தேதி ஹைதராபாத்தில் ரிசப்ஷன் நடக்கிறது. திருமணத்துக்கு பிறகு இரண்டு மாதங்கள் சோஷியல் மீடியா, சினிமா உள்ளிட்டவைகளிலிருந்து விலகியிருக்க இருவரும் முடிவு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
திருமண ஏற்பாடுகள் தீவிரம்: திருமணத்தில் கலந்துகொள்பவர்கள் மொபைல் ஃபோனை பயன்படுத்த வேண்டாம் எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளார்கள். இன்னும் ஒரு வாரமே திருமணத்துக்கு இருப்பதால் ஏற்பாடுகள் எல்லாம் ஜோராக நடந்துவருகின்றன. ஜுப்ளி ஹில்ஸில் இருக்கும் விஜய் தேவரகொண்டாவின் வீடு வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருக்கின்றன. இந்நிலையில் அவர்களது திருமண பத்திரிகை பெட்டியின் உள்ளே என்னென்ன பொருட்கள் இருக்கின்றன என்பது குறித்து தெரியவந்திருக்கிறது.
பத்திரிகை பெட்டியில் என்னென்ன?: அந்தப் பெட்டியில் ராஷ்மிகா மந்தனா மற்றும் விஜய் தேவரகொண்டாவின் பெயர்கள் பொறிக்கப்பட்டிருக்கின்றன. அதற்குள் மஞ்சள் நிற அமரில்லிஸ் மலர்கள் மற்றும் பிங்க் நிற பீஸ் லில்லிகள் இருக்கின்றன. மேலும், நேஷன் க்ரஷ் என எழுதப்பட்ட பர்ஃப்யூம், ரவுடி என எழுதப்பட்ட மஞ்சள் நிற டி- ஷர்ட், கை - கால்களில் தேய்க்கும் ஆயுர்வேத க்ரீம், முந்திரி பருப்பு கொண்ட சின்ன பெட்டியும் இருக்கின்றன. தற்போது அந்த வீடியோ சென்சேஷனல் ஆகியிருக்கிறது.
விஜய் தேவரகொண்டா சொன்னது: முன்னதாக திருமண பத்திரிகையில் விஜய் தேவரகொண்டா, "எங்கள் வாழ்க்கையில் முக்கியமான மற்றும் மகிழ்ச்சியான செய்தியை உங்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்புகிறோம். எங்கள் குடும்பங்களின் ஆசீர்வாதங்களுடன் நானும், ராஷ்மிகாவும் 26ஆம் தேதி திருமணம் செய்துகொள்ளவிருக்கிறோம். உங்கள் ஆசிர்வாதங்கள் எங்களுக்கு அர்த்தத்தை கொடுக்கும்" என எழுதியிருந்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











