ராஷ்மிகா மந்தனா விஜய் தேவரகொண்டா வைத்த விருந்து.. கெஸ்ட் யாரு தெரியுமா?.. சூப்பர் மனசு பாஸ்
ஹைதராபாத்: நடிகை ராஷ்மிகா மந்தனாவுக்கும், நடிகர் விஜய் தேவரகொண்டாவுக்கும் கடந்த மாதம் ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் வைத்து பிரமாண்டமாக திருமணம் நடந்தது. அதற்கு பிறகு ஹைதராபாத்தில் வைத்து கோலாகலமாக ரிசப்ஷனும் நடந்தது. அதில் ஏராளமான திரை பிரபலங்கள் கலந்துகொண்டார்கள். திருமணத்துக்கு பிறகு சினிமாவிலிருந்து குட்டி பிரேக் எடுத்திருக்கும் இரண்டு பேரும்; மீண்டும் பழையபடி விரைவில் நடிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
கீதா கோவிந்தம் உள்ளிட்ட படங்களில் விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக நடித்தார் ராஷ்மிகா மந்தனா. அப்போது அவர்களுக்குள் ஏற்பட்ட பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. முக்கியமாக ரிஷப் ஷெட்டியுடன் ராஷ்மிகாவுக்கு பிரேக்கப் ஏற்பட்டபோது விஜய் தேவரகொண்டாதான் முழு ஆதரவாகவும் இருந்திருக்கிறார். அதுதான் இரண்டு பேருக்குள்ளும் காதல் மலர்வதற்கு முக்கிய காரணங்களில் ஒன்றாக இருந்தது குறிப்பிடத்தக்கது. இவர்களது திருமணத்துக்கு வீட்டில் சம்மதம் கிடைத்ததை அடுத்து கடந்த வருடத்தில் வைத்து சிம்ப்பிளாக நிச்சயதார்த்தம் செய்துகொண்டார்கள்.

உதய்பூரில் திருமணம்: அதனையடுத்து ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் வைத்து இரண்டு பேரும் திருமணம் செய்துகொண்டார்கள். கிலோ கணக்கிலான தங்கத்தை இரண்டு பேருமே திருமணத்தில் அணிந்திருந்தார்கள். உறவினர்க்ளும், நெருங்கிய நண்பர்களும் மட்டுமே இந்தத் திருமணத்தில் கலந்துகொண்டார். குதிரையில் ராஜா மாதிரி வந்து ராஷ்மிகாவின் கழுத்தில் தாலி கட்டினார் விஜய். தனது கழுத்தில் விஜய்யின் தாலி ஏறும்போது ஆனந்தத்தில் கண்கள் கலங்கினார் நேஷனல் க்ரஷ்.
சூப்பர் ரிசப்ஷன்: திருமணத்துக்கு பிறகு ஹைதராபாத்தில் இருக்கும் நட்சத்திர ஹோட்டலில் வைத்து ரிசப்ஷன் நடைபெற்றது. அதில் திரையுலகத்தை சேர்ந்த ஏராளமான பிரபலங்கள் கலந்துகொண்டார்கள். கோலிவுட்டிலிருந்து கார்த்தி, ராதிகா, சரத்குமார் உள்ளிட்ட சிலர் மட்டுமே கலந்துகொண்டார்கள். திருமணத்தை முடித்துவிட்டு கொஞ்ச காலம் சினிமாவிலிருந்து பிரேக் எடுத்திருக்கிறார்கள் இந்த நட்சத்திர ஜோடி. விரைவில் மீண்டும் பழையபடி விரைவில் நடிக்க ஆரம்பித்துவிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
தேவரகொண்டா செய்யும் நல்லது: திருமணம் முடிந்த கையோடு தனது சொந்த ஊருக்கு மனைவியை அழைத்து சென்ற விஜய் தேவரகொண்டா; அங்கே அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கான செலவை ஏற்றுக்கொண்டிருக்கிறார். அதேபோல் தன்னுடைய ரசிகர்களுக்கும், ரசிகைகளுக்கும் அவர்கள் விருந்தும் வைத்தார்கள். இந்நிலையில் விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனாவின் ரசிகையாக இருக்கும் சிறுமி ஒருவர், திருமணத்துக்கு தன்னை அழைக்கவில்லை என இன்ஸ்டாகிராமில் வீடியோ வெளியிட்டிருந்தார்.
விருந்து வைத்த ஜோடி: அந்த வீடியோ இரண்டு பேரின் கண்களிலும் பட்டதை அடுத்து; உடனடியாக அந்த சிறுமியை தங்களது வீட்டுக்கு அழைத்து தடல்புடலாக விருந்து வைத்தார்கள். அந்த விருந்தில் சிறுமிக்கு பிடித்த உணவுகள் மட்டுமே இடம்பெற்றிருந்தன. விருந்து முடித்த பிறகு அந்த சிறுமியுடன் மகிழ்ச்சியோடு புகைப்படமும் எடுத்துக்கொண்டார்கள். அவர்கள் விருந்து வைத்த புகைப்படங்களும் சோஷியல் மீடியாவில் ட்ரெண்டாகியுள்ளன. அதை பார்த்த ரசிகர்கள் அட விஜய்க்கும், ராஷ்மிகாவுக்கும் தங்கமான மனசு ப்பா.. சிறுமியின் வீடியோவை அசால்ட்டாக எடுத்துக்கொள்ளாமல் அதற்கும் முக்கியத்துவம் கொடுக்கிறார்களே என வாழ்த்து தெரிவித்துவருகிறார்கள்.


Click it and Unblock the Notifications















