தமிழ்ல தளபதி விஜய்... தெலுங்கு அந்த விஜய்... நடிகை மாளவிகா மோகனன் குஷி

By

சென்னை: விஜய் தேவரகொண்டா ஜோடியாக, நடிகை மாளவிகா மோகனன் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

மலையாளத்தில், பட்டம் போலே படம் மூலம் நடிகையாக அறிமுகமானவர் மாளவிகா மோகனன். இதில் ஹீரோவாக துல்கர் சல்மான் நடித்திருந்தார்.

Recommended Video

Master Malavika Mohanan Recent Glamourous Photoshoot | Thalapathy Vijay

பின்னர் மலையாளத்தில் நிர்மயாகம், த கிரேட் ஃபாதர் படங்களில் நடித்த இவர், கன்னடத்திலும் நடித்தார்.

இஷான் கட்டார் ஜோடி

இஷான் கட்டார் ஜோடி

இதையடுத்து பிரபல ஈரானிய இயக்குனர் மஜித் மஜிதி இந்தியில் இயக்கிய பியான்ட் த கிளவுட்ஸ் படத்தில் இஷான் கட்டார் ஜோடியாக நடித்தார். பிரபல ஒளிப்பதிவாளர் கே.யு.மோகனனின் மகளான மாளவிகா மோகனன், தமிழில் ரஜினிகாந்த் நடித்த 'பேட்ட' படம் மூலம் அறிமுகமானவர். சன் பிக்சர்ஸ் தயாரித்திருந்த இந்தப் படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்கியிருந்தார். அனிருத் இசை அமைத்திருந்தார்.

மாஸ்டர்

மாஸ்டர்

இந்தப் படம் மூலம் மாளவிகா மோகனன் கவனிக்கப்பட்டார். இதையடுத்து விஜய்யின் மாஸ்டர் படத்தில் நடித்துவருகிறார். இதை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். விஜய் சேதுபதி, சாந்தனு, ஆண்ட்ரியா, அர்ஜுன் தாஸ், ரம்யா, ஸ்ரீநாத், ஸ்ரீமன் என பலர் நடித்து வருகின்றனர். இந்தப் படத்தில் மாளவிகாவும் ஆக்‌ஷன் காட்சிகளில் நடிப்பதாகக் கூறப்படுகிறது.

சூர்யா ஜோடியாக

சூர்யா ஜோடியாக

இதற்கிடையே அவர் சூர்யா ஜோடியாக நடிக்க இருப்பதாகச் செய்திகள் வெளியாகின. இந்தப் படத்தை ஹரி இயக்குகிறார். ஆனால் இது உறுதிப்படுத்தப்படவில்லை. இந்நிலையில் அவரது போட்டோ ஷூட் புகைப்படங்கள் இணையத்தில் நேற்று வைரலாயின. ஹாட் புகைப்படங்களான அதை ஏராளமான ரசிகர்கள் ஷேர் செய்திருந்தனர்.

விஜய் தேவரகொண்டா

விஜய் தேவரகொண்டா

இந்நிலையில், விஜய் தேவரகொண்டா ஜோடியாக இவர் நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. விஜய் தேவரகொண்டா இப்போது புரி ஜெகநாத் இயக்கும் ஃபைட்டர் படத்தில் நடித்துவருகிறார். இந்தப் படத்துக்கு முன் அவர் ஹீரோ என்ற படத்தில் நடிப்பதாக இருந்தது. இதை தமிழ் இயக்குனர் ஆனந்த் அண்ணாமலை இயக்குவதாக அறிவிக்கப்பட்டது.

மாளவிகா மோகனன்

மாளவிகா மோகனன்

சில நாட்கள் ஷூட்டிங் போன நிலையில் அந்தப் படம் டிராப் ஆனதாகக் கூறப்பட்டது. இந்தப் படத்தை இப்போது மீண்டும் தொடங்க முடிவு செய்திருக்கிறார் நடிகர் விஜய் தேவரகொண்டா. விளையாட்டை மையப்படுத்திய இந்த கதையில் மாளவிகா மோகனன் ஹீரோயினாக நடிக்க இருக்கிறார் என்று கூறப்படுகிறது.

தமிழில் தளபதி விஜய்யுடன் நடிக்கும் மாளவிகா, தெலுங்கில் இளம் சூப்பர் ஸ்டார் விஜய்யுடன் நடிக்க இருக்கிறார் என்கிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X