'ஃபைட்டரு'க்காக தாய்லாந்தில் தற்காப்பு கலைப் பயிற்சி... 15 பேருடன் தினமும் மோதும் விஜய் தேவரகொண்டா

By

மும்பை: ஃபைட்டர் படத்தில் நடிப்பதற்காக, நடிகர் விஜய் தேவரகொண்டாவுக்கு தாய்லாந்து தற்காப்பு கலைப் பயிற்சி அளிக்கப்படுகிறது.

அர்ஜூன் ரெட்டி படம் மூலம் பிரபலமான தெலுங்கு ஹீரோ, விஜய் தேவரகொண்டா. இவர் தமிழில், நடிகையர் திலகம், நோட்டோ, டியர் காம்ரேட் ஆகிய படங்களில் நடித்துள்ளார். இப்போது, வேர்ல்ட் ஃபேமஸ் லவ்வர் என்ற படத்தில் நடித்து வருகிறார்.

அடுத்து அவர் நடிக்கும் படம், ஃபைட்டர். இதை புரி ஜெகநாத் இயக்குகிறார். இவர் தெலுங்கு, இந்தி, கன்னடம் உட்பட 30 படங்களுக்கு மேல் இயக்கியவர்.

நடிகை சார்மி

நடிகை சார்மி

இதை, இந்தி பட இயக்குனர் கரண் ஜோகருடன் இணைந்து புரி ஜெகநாத், நடிகை சார்மி தயாரிக்கின்றனர். இதில் நடிகை ஶ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் ஹீரோயினாக நடிப்பதாக முதலில் கூறப்பட்டது.

அனன்யா பாண்டே

அனன்யா பாண்டே

ஆலியா பட், அனன்யா பாண்டே ஆகியோர் பெயர்தான் பரிசீலனையில் இருந்ததாகவும் கரண் ஜோகர், ஜான்வி கபூர் பெயரை, இயக்குனருக்கு சிபாரிசு செய்ததாகவும் கூறப்பட்டது. இதில் நடிக்க சம்பளமாக ரூ.3.5 கோடி கேட்டதாகவும் கூறப்பட்டது.

தமிழ், தெலுங்கில்

தமிழ், தெலுங்கில்

இந்நிலையில் இதன் ஷூட்டிங் பிப்ரவரியில் தொடங்குகிறது. இந்தப் படம் தமிழ், தெலுங்கில் உருவாகும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் இந்தப் படத்துக்காக தற்காப்பு கலை கற்கிறார் விஜய் தேவரகொண்டா.

தாய்லாந்தில் பயிற்சி

தாய்லாந்தில் பயிற்சி

இதற்காக தாய்லாந்தில் 15 பேர் கொண்ட குழு, அவருக்கு பல்வேறு தற்காப்புக் கலைகளை கற்றுக்கொடுக்கிறது. இதனால் அவர் கடுமையான டயட்டை கடைபிடித்து வருகிறார் என்று படக்குழுத் தெரிவித்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X