Oviya: ஓவியாவை திட்டும் விஜய் ரசிகர்கள்.. அசராமல் போஸ்ட் போட்ட ஓவியா.. இறங்கிதான் அடிக்கல!
சென்னை: நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய், கடந்த 27ஆம் தேதி கரூரில் பரப்புரை நடத்தி விட்டுச் சென்றார். இந்த பரப்புரையில் கலந்து கொண்ட விஜய் ரசிகர்கள், தமிழக வெற்றிக் கழகத் தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் என மொத்தம் 42 பேர், உயிரிழந்தனர். இதில் 10 பேர் குழந்தைகள் என்பது பெரும் வேதனைக்குரிய விஷயம். இப்படி இருக்கையில், சம்பவம் நடைபெற்ற சில மணி நேரங்களில் நடிகை ஓவியா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விஜய்யை கைது செய்ய வேண்டும் என்று பதிவிட்டதாக ஸ்கிரீன் ஷாட்கள் இணையத்தில் வேகமாக பரவியது. மேலும் அதை அவர் டெலிட் செய்துவிட்டார் என்றும் கூறப்பட்டது.
இந்நிலையில் ஓவியாவின் இன்ஸ்டாகிராம் பதிவுகளுக்கு விஜய் ரசிகர்கள் செய்த கமெண்ட் என்பது பெரும் அதிர்ச்சியை பலருக்கும் ஏற்படுத்தி உள்ளது. அதாவது விஜய் ரசிகர்கள் மிகவும் மோசமாகவும், நாகரீகமற்ற வார்த்தைகளைக் கொண்டு, மிகவும் கொச்சையாக ஓவியாவை விமர்சித்தும், விஜய்யை கைது செய்யச் சொல்லி அவர் பதிவிட்டதற்கு மன்னிப்பு கேட்கச் சொல்லியும் கமெண்ட் போட்டு வந்தார்கள். இந்த கமெண்ட்களை எல்லாம், ஸ்கிரீன் ஷாட் எடுத்த ஓவியா, அவற்றை எல்லாம் தனது இன்ஸ்டாகிராமில் ஸ்டோரியாக பதிவிட்டுள்ளார். ஓவியா இப்படி ஸ்கிரீன் ஷாட்களை ஷேர் செய்வார் என்று யாரும் நினைக்கவில்லை. விஜய் ரசிகர்களின் இந்த நாகரீகமற்ற செயல் பலரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது.

விஜய் ரசிகர்கள்: இப்படியான நிலையில் நடிகை ஓவியா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது புகைப்படம் ஒன்றைப் பகிர்ந்து அதற்கு அட்டகாசமான கேப்ஷன் ஒன்றையும் இட்டுள்ளார். அதாவது, நீ விரும்பும் பெண்ணாக இரு என்று கேப்ஷன் ஆங்கிலத்தில் இட்டுள்ளார். அவரது இந்த பதிவுக்கும் விஜய் ரசிகர்கள் தொடர்ந்து மோசமாக கமெண்ட் போட்டு வருகிறார்கள். அதே நேரத்தில் ஓவியாவுக்கு ஆதரவாகவும் சிலர் பதிவிட்டு வருகிறார்கள். அதாவது ஓவியாவை மோசமாக விமர்சிப்பவர்கள், " ஓவியாவை கைது செய், ஓவியாவை யாரும் பின்தொடர வேண்டாம், பெறப்பட்ட PAYTM தொகை ரூபாய் ₹200, தவெகவினர் அனைவரும் சேர்ந்து ஓவியாவின் இன்ஸ்டாகிராம் பக்கத்திற்கு ரிப்போர்ட் அடிக்க வேண்டும்" என பல பதிவுகளை பார்க்க முடிகிறது.
ஓவியாவுக்கு ஆதரவு: அதே நேரத்தில், ஓவியாவுக்கு ஆதரவாக சிலர், " இரும்பு பெண், ரொம்பவும் தைரியம்தான், ஓவியா தைரியமான பெண், உங்களை எல்லாம் ஒரு பொண்ணு எதிர்த்து கேள்வி கேட்டா உடனே அந்த பெண்ணை ஆபாசமாக பேசுவதும் நடத்தையை விமர்சிப்பதும் தான் உங்க புத்தி. இதுதான் விஜய் கட்சி லட்சணம் விஜய் நிர்வாகிகள் லட்சணம், இவர்கள் எப்படி தமிழ்நாட்டை வழி நடத்துவார்கள்" என்று பதிவிடுபவர்களையும் பார்க்க முடிந்தது.
இழப்பீடு: கரூரில் நடைபெற்ற துயர சம்பவம் மொத்த தமிழ்நாட்டையும் கவலையில் ஆழ்த்தி உள்ளது. உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் ரூபாய் 20 லட்சமும், தமிழ்நாடு அரசு சார்பில் ரூபாய் 10 லட்சமும், மத்திய அரசு சார்பில் ரூபாய் 2 லட்சமும் இழப்பீடாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த துயரச் சம்பவத்தை, அடுத்த வாரத்தில் விஜய்யின் சுற்றுப்பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது. அதாவது அடுத்த வாரத்தில் அவர் வேலூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டத்திற்கு பிரச்சாரம் செய்யச் செல்வதாக இருந்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











