விஜய் மாதிரி ஒரு ஜாலியான மெகா ஹீரோவை நான் பார்த்ததே இல்லை: சமந்தா
சென்னை: விஜய் ரொம்பவும் ஜாலியான ஆள் அவர் ஒன்றும் மூடி டைப் எல்லாம் கிடையாது என்று நடிகை சமந்தா தெரிவித்துள்ளார்.
சமந்தா விஜய்யுடன் முதன்முதலாக ஜோடி சேர்ந்துள்ள படம் கத்தி. ஏ.ஆர். முருகதாஸ் இயக்கி வரும் கத்தி தீபாவளி பண்டிகைக்கு ரிலீஸ் செய்யப்படுகிறது. இதையொட்டி பட வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
இந்நிலையில் ஹீரோ விஜய் பற்றி சமந்தா கூறுகையில்,

எளிமை
நான் பல பெரிய ஹீரோக்களுடன் நடித்துள்ளேன். ஆனால் விஜய் போன்று அவ்வளவு எளிமையான நடிகரை நான் இதுவரை பார்த்தது இல்லை.

விஜய்
விஜய் மூடி டைப் யாருடனும் பேச மாட்டார் என்று சிலர் கூறினார்கள். அதனால் கத்தி படப்பிடிப்பின் முதல் நாள் அன்று நான் விஜய் பக்கமே செல்லவில்லை.

கேரவன்
விஜயக்கு தனியாக கேரவன் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் அவரோ கேரவனுக்குள் செல்லாமல் சக நடிகர், நடிகைகளுடன் ஜாலியாக பேசிக் கொண்டிருப்பார்.

அன்பு
ஒரு ஜூனியர் ஆர்டிஸ்டுடன் கூட அன்பாகப் பேசுபவர் விஜய். மேலும் படப்பிடிப்பு தளத்தில் ஜோக் அடித்துக் கொண்டே இருப்பார்.

வியப்பு
விஜய் போன்ற ஒரு பெரிய ஹீரோ சக நடிகர்களுடன் இவ்வளவு ஜாலியாக பேசிப் பழகுவதை பார்க்கையில் வியப்பாக உள்ளது.

பிறர் பேச்சு
விஜய் மூடி டைப் என்று பிறர் கூறியதை கேட்டு நம்பிவிட்டேன். தற்போது தான் அவர் எவ்வளவு ஜாலியானவர் என்பதை புரிந்து கொண்டேன் என்றார் சமந்தா.


Click it and Unblock the Notifications











